கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட மீராவோடை - 4 மீனவர் சங்க வீதியில் அமைந்துள்ள சிறிய பாலம் மின்விளக்கொளி இன்றி இருளில் காணப்படுகிறது.
மின் விளக்குகள் பொருத்தப்படாமல் மிக நீண்ட காலமாக இந்தப் பாலம் இருண்டு கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அந்த பாலத்தை குறுக்கறுத்துச் செல்லும் சிறுவர்கள், வயோதிபர்கள், பெண்கள் என அனைவரும் அச்சத்துடன் கடந்துசெல்கின்றனர்.
இந்த சிறு பாலம் இருளில் காணப்படுவதால் அங்கு சமூக சீர்கேடுகள் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாக பிரதேசவாசிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
இப்பாலத்தினூடாக பள்ளிவாசலுக்குச் செல்வோரும் ஏனைய தேவைகளுக்காக செல்வோரும் நாளாந்தம் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
எனவே, பொதுமக்களின் நலன் கருதி ஓட்டமாவடி பிரதேச சபை நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து, இந்த பாலத்தின் மீதும் அதை அண்டிய பகுதியிலும் மின்விளக்குகளைப் பொருத்த வேண்டும் என பிரதேசவாசிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM