மூன்று தசாப்தங்களுக்கு மேல் நீடிக்கும் சிங்கர் - MCA உறவு

09 Oct, 2025 | 01:33 PM
image

(நெவில் அன்தனி)

வர்த்தக கிரிக்கெட் சங்கத்தினால் (MCA) நடத்தப்படும் 32ஆவது சிங்கர் - MCA சுப்பர் பிறீமியர் லீக் கிரிக்கெட் நிறைவுபெறும் கட்டத்தை அண்மித்துள்ளது.

இப் போட்டிக்கு மூன்று தசாப்தங்களுக்கு மேல் சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி அனுசரணை வழங்குவதையிட்டு பெருமை அடைவதாக அதன் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜன்மேஷ் அன்தனி தெரிவித்தார்.

சிங்கர்   சுப்பர் பிறீமியர் லீக் கிரிக்கெட்டுக்கான அனுசரணை வழங்கும் நிகழ்வும் ஊடக சந்திப்பும் வர்த்தக கிரிக்கெட் சங்க கேட்போர்கூடத்தில் செவ்வாய்க்கிழமை (07) மாலை நடைபெற்றது.

இதன் போது கருத்து வெளியிட்ட ஜன்மேஷ் அன்தனி,

'வர்த்தக கிரிக்கெட் சங்கம் நடத்தும் சுப்பர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிக்கு மூன்று தசாப்தங்களுக்கு மேல் அனுசரணை வழங்குவதையிட்டு சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி பெருமை அடைகிறது. இப் போட்டிகளில் தேசிய வீரர்கள் பலர் பங்குபற்றுவது சுப்பர் பிறிமியர் லீக்கை மேலும் மெருகூட்டுகிறது' என்றார்.

சுப்பர் பிறீமியர் லீக்கின் முதலாம் கட்டமான லீக் சுற்று செப்டெம்பர் 2ஆம் திகதி ஆரம்பித்து 17ஆம் திகதி நிறைவடைந்ததுடன் லீக் போட்டியில் சிடிபி தோல்வி அடையாத அணியாக சம்பியனானது.

இப் போட்டியில் சிடிபி, மெலிபன் பிஸ்கட்ஸ், ஹேலீஸ் குழுமம், பிபிகே பார்ட்னர்ஷிப், பெயார்பெர்ஸ்ட், எச்என்பி ஆகியன பங்குபற்றின.

லீக் சுற்று;று முடிவில் இதே ஆறு அணிகள் 5 போட்டிகளைக் கொண்ட நொக் அவுட் சுற்றில் பங்குபற்றின.

லீக் சுற்று முடிவில் முதல் இரண்டு இடங்களைப் பெற்ற சிடிபி மற்றும் மெலிபன் பிஸ்கட்ஸ் ஆகிய  அணிகள்   நேரடியாக அரை இறுதிகளில் விளையாட தகுதிபெற்றன.

மற்றைய நான்கு அணிகளும் ப்ளே ஓவ் சுற்றில் பங்குபற்றின.

முதலாவது ப்ளே ஓவ் போட்டியில் எச்என்பி (6ஆம் நிலை) அணியை 89 ஓட்டங்ளால் ஹேலீஸ் குழுமம் (3ஆம் நிலை) அணி வெற்றி கொண்டது.

இரண்டாவது ப்ளே ஓவ் போட்டியில் பிபிகே பார்ட்னர்ஷிப் (4ஆம் நிலை) அணியை 146 ஓட்டங்களால் பொயர்பெர்ஸ்ட் அணி வெற்றிகொண்டது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் சிடிபி (முதலாம் நிலை) அணியை 63 ஓட்டங்களால் ஹேலீஸ் குழுமம் அணி வெற்றிகொண்டது.

இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் அணியை 8 விக்கெட்களால் மெலிபன் பிஸ்கட்ஸ் (2ஆம் நிலை) அணி வெற்றிகொண்டது.

பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ் அணிக்கு எதிரான இரண்டாவது  அரை  இறுதிப் போட்டியில் மெலிபன் பிஸ்கட்ஸ் அணியைச் சேர்ந்த துஷான் ஹேமன்த (8.4 ஒவர்கள் - 29 ஓட்டங்கள் - 8 விக்கெட்கள்), சிடிபி அணிக்கு எதிரான முதலாவது அரை இறுதிப் போட்டியில் ரமேஷ் மெண்டிஸ் (153 ஆ.இ.) ஆகியோரினால் மிகச் சிறந்த ஆற்றல்கள் வெளிப்படுத்தப்பட்டது விசேட அம்சமாகும்.

மெலிபன் பிஸ்கட்ஸ் அணிக்கும் ஹேலீஸ் குழுமம் அணிக்கும் இடையிலான இறுதிப் போட்டியை மெய்ட்லண்ட் க்ரசென்ட், சிசிசி மைதானத்தில் அக்டோபர் 24ஆம் திகதி பகல் இரவு போட்டியாக நடத்த தற்காலிக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மூன்றாம் கட்டம்: ரி20 சுற்றுப் போட்டி

ஆறு அணிகள் இரண்டு குழுக்களாக வகுக்கப்பட்டு லீக் முறையில் ரி20 கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இதில் 9 போட்டிகள் அடங்கும்.

ஏ குழுவில் பெயார்பெர்ஸ்ட் இன்சூரன்ஸ், மெலிபன் பிஸ்கட்ஸ், டேவிட் பீரிஸ் நிறுவனங்கள் குழுமம் (நடப்பு சி பிரிவு சம்பியன்) ஆகிய அணிகளும் பி குழுவில் ஹேலீஸ் குழுமம், சிடிபி, பிபிகே பார்ட்னர்ஷிப் அகிய அணிகளும் பங்குபற்றுகின்றன.

ரி20 சுற்றுப் போட்டியிலிருந்து எச்என்பி வாபஸ் பெற்றதால் டேவிட் பீரிஸ் நிறுவனங்கள் குழுமம் இணைத்துக் கொள்ளப்பட்டது.

பங்குபற்றும் அணிகளுக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் இலவசமாக வழங்கப்பட்ட 'க்றேஸ் கெவலியர்' (Grays Cavalier) வெள்ளைப் பந்துகள் போட்டிகளின்போது பயன்படுத்தப்பட்டன.

சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், தொடர் நாயகன், நொக் அவுட் இறுதி ஆட்ட நாயகன் ஆகிய விருதுகள் வழங்கப்படும். தொடர் நாயகனுக்கு சிங்கர் எல்ஈடி தொலைக்காட்சி பரிசாக வழங்கப்படும். இந்த விருது 2000ஆம் ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது.

ரி20 சுற்றுப் போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர், இறுதி ஆட்ட நாயகன் ஆகிய விருதுகள் வழங்கப்படும்.

இப் போட்டிகளுக்கான அனுசணைக்குரிய ஆவணத்தை வர்த்தக கிரிக்கெட் சங்க (ஆஊயு) உதவித் தலைவரும் அனுசரணைக் குழுத் தலைவருமான சிரோஷ குணதிலக்கவிடம் சிங்கர் ஸ்ரீலங்கா பிஎல்சி சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஜன்மேஷ் அன்தனி கையளித்தார்.

எம்சிஏ பொதுச் செயலாளர் கே. டி. எஸ். கனிஷ்கவும் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹொங்கொங் சிக்சஸ் கோப்பைப் பிரிவில் ஹொங்கொங்...

2025-11-10 12:38:02
news-image

ஹொங்கொங் சிக்சஸ் கிரிக்கெட்டில் பிரதான கிண்ணப்...

2025-11-10 11:44:35
news-image

லைவ்போய் கிண்ணத்துக்கான 20 வயதின்கீழ் கால்பந்தாட்ட...

2025-11-08 04:10:15
news-image

ஹொங்கொங் சிக்சஸ் நடப்பு சம்பியன் இலங்கை...

2025-11-08 04:05:24
news-image

இலங்கையின் ரி20 அணிக்கு உப தலைவராக...

2025-11-08 03:59:56
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-07 23:23:32
news-image

ஹொங்கொங் சிக்சஸில் சம்பியன் பட்டத்தை தக்கவைக்கும்...

2025-11-06 19:26:24
news-image

லைவ்போய் கிண்ண கால்பந்தாட்ட அரை இறுதிகளில்...

2025-11-06 17:30:20
news-image

மத்திய ஆசிய 19 வயதுக்குட்பட்ட பெண்கள்...

2025-11-06 13:46:09
news-image

மகளிர் பிறீமியர் லீக் 2026 :...

2025-11-06 13:26:50
news-image

20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண...

2025-11-05 15:39:50
news-image

20 வயதின் கீழ் லைவ்போய் கிண்ண...

2025-11-05 13:59:12