யாழ்ப்பாணம் - கண்டி ஏ 09 பிரதான வீதியில் விபத்து ; ஒருவர் பலி!

09 Oct, 2025 | 01:09 PM
image

யாழ்ப்பாணம் - கண்டி ஏ 09 பிரதான வீதியின் உளங்குளம பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மரதன்கடவல பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து புதன்கிழமை (08) மாலை இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் மரதன்கடவல பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொலிஸார் தெரிவித்தனர்.

அநுராதபுரம் பகுதியில் இருந்து மரதன்கடவல பகுதிக்கு பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டினை இழந்து விபத்துக்குள்ளானதில் பலத்த காயங்களுக்குள்ளான இளைஞன் மரதன்கடவல வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்ததன் பின்னர் உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

24 வயதுடைய மரதன்கடவல பகுதியை வசிப்பிடமாக கொண்ட இளைஞன் ஒருவரே  உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் சடலம் தற்சமயம் மரதன்கடவல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மரதன்கடவல பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலைக்குள் சொகுசாக இருக்கும் கைதியின் காணொளி...

2025-11-10 16:24:58
news-image

காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு!

2025-11-10 15:47:14
news-image

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் ...

2025-11-10 15:43:40
news-image

பெருந்தோட்ட சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த...

2025-11-10 15:14:44
news-image

update : தலாவ பஸ் விபத்தில்...

2025-11-10 16:16:43
news-image

நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு ;...

2025-11-10 13:29:34
news-image

தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்...

2025-11-10 13:28:54
news-image

அரசியல் தீர்வும் பொறுப்புக் கூறலும் :...

2025-11-10 15:16:29
news-image

தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ;...

2025-11-10 15:01:12
news-image

யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய...

2025-11-10 14:56:40
news-image

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகள், திரவங்கள்,...

2025-11-10 13:26:20
news-image

கடும் மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு...

2025-11-10 13:43:54