அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக குடியேறச்சென்ற 15 பேரை அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கைக்கு திருப்பியனுப்பியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் விசேட விமானத்தின் மூலம் குறித்த  15 பேரும் இன்று காலை 7.30 மணியளவில் கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தனர்.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள 15 பேரும் விசாரணைகளின் பின்னர், விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இவ்வாறு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு குடியேறச்சென்று திருப்பியனுப்பப்பட்ட 15 பேரும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.