(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் பெப்ரவரி மாதம் இலங்கைக்கு வருவது , தேனீர் குடித்து விட்டு செல்வதற்கல்ல. சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகளின் முன்னேற்றத்தை ஆராய்வதற்காகவே மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வருகின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

அரசாங்கம் சர்வதேச அழுத்தங்களை மறைத்து கொள்வதற்கு உள் நாட்டில் போலியான பிரசாரங்களை செய்து வருகின்றது. அரசியலமைப்பு விடயத்தில் மேற்குலக நாடுகளின் தேவைகளும் புலிகளின் கொள்கைகளுமே காணப்படுகின்றன. ஆகவே இன்று நாடு பேராபத்தில் சிக்குண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பு தொடர்பில் தெளிவுப்படுத்துகையிலேயே  பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் இவ்வாறு தெரிவித்தார்.