இந்த வருடத்திற்கான மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் தொடர்பாக, பொதுமக்களின் கருத்துக்களைப் பெறுவதற்காக நடத்தப்பட்ட அமர்வுகளில், சுமார் 500 பேர் யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு, நாட்டின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய பொதுக் கருத்து ஒன்றுகூடல் செப்டம்பர் மாதம் 18ஆம் திகதி ஆரம்பமானது.
அதன் இறுதி அமர்வு நேற்று புதன்கிழமை (08) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் மேல் மாகாணத்தை மையமாகக் கொண்டு நடைபெற்றது.
குறித்த அமர்வுகளில் முன்வைக்கப்பட்ட அனைத்து யோசனைகள் மற்றும் பரிந்துரைகளையும் கருத்திற்கொண்டு, மின்சார கட்டண திருத்தம் குறித்த ஆணைக்குழுவின் இறுதி தீர்மானம் இந்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.
இலங்கை மின்சார சபை, அண்மையில்; மின்சார கட்டண திருத்தத்திற்கான தமது முன்மொழிவை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்து.
இதில் மின்சார கட்டணங்களை 6.8 சதவீதம் அதிகரிக்க வேண்டுமென முன்மொழியப்பட்டிருந்தது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM