உலகளவில் அமைதிப் படைகள் சுமார் 25 சதவீதம் குறைக்கப்பட வேண்டிய நிலை உருவாகியுள்ளது என சிரேஷ்ட ஐ.நா. அதிகாரி புதன்கிழமை (அக்டோபர் 8) தெரிவித்துள்ளார்.
இதற்கு அமெரிக்கா நிதி உதவியை குறைத்தமையினால் ஏற்பட்ட நிதி பற்றாக்குறை காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் சுமார் 13,000 முதல் 14,000 இராணுவ மற்றும் பொலிஸ் பணியாளர்கள் மற்றும் அவர்களின் உபகரணங்களும் தாய்நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளன. மேலும், பல்வேறு பணிகளில் உள்ள பொதுப்பணியாளர்களும் பாதிக்கப்படவுள்ளனர்.
2025–2026 ஆம் ஆண்டிற்கான அமைதிப் பணிகளுக்கான 5.4 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியில், அமெரிக்கா 1.3 பில்லியன் டொலர் வழங்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது, அது 682 மில்லியன் டொலர் மட்டுமே வழங்கும் என தெரிவித்துள்ளது. இதில் ஹெய்டி கும்பல் எதிர்ப்பு நடவடிக்கைக்காக 85 மில்லியன் டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.
சீனாவும் 1.2 பில்லியன் டொலர் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் ஜூலை மாதம் நிலவரப்படி 2 பில்லியன் டொலர் நிலுவை நிதி செலுத்தப்படாமல் உள்ளது. இதனால், மொத்த நிதியில் 16–17 சதவீத குறைவு ஏற்படும் என ஐ.நா. கூறுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், சர்வதேச அமைப்புகள் அமெரிக்காவை பயன்படுத்திக் கொள்கின்றன என்ற குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டு உதவிகளில் பெரும் வெட்டுக்களை மேற்கொண்டுள்ளார்.
அமைதிப் படை குறைப்பால் நடுநிலை கண்காணிப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, மனிதாபிமான பணிகள் போன்றவை பாதிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்த 25 சதவீத குறைப்பு 11 அமைதிப்பணிகளில் 9 பணி தளங்களில் நடைமுறைப்படுத்தப்படும். ஐ.நா. தற்போது கொங்கோ, லெபனான், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, தென் சூடான், மேற்கு சஹாரா உள்ளிட்ட இடங்களில் படைகளை நியமித்துள்ளது.
இது மனிதாபிமான பணிகளுக்கான பாதுகாப்பை கடுமையாக பாதிக்கக்கூடும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.
இந்த குறைப்பு சில நாடுகளில் (குறிப்பாக தென் சூடான் போன்ற இடங்களில்) மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என சர்வதேச நெருக்கடிகளுக்கு குழுவின் நிபுணர் ரிச்சர்ட் கவான் தெரிவித்துள்ளார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM