மர்மமான முறையில் முதியவர் உயிரிழப்பு ; பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

09 Oct, 2025 | 11:41 AM
image

மர்மமான முறையில் உயிரிழந்த முதியவர் ஒருவரின் சடலத்தை அடையாளம் காண சீதுவை பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சீதுவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் குருண மற்றும் கட்டுநாயக்க ஆகிய பிரதேசங்களுக்கு இடையில் உள்ள பகுதியில் செப்டெம்பர் 26 ஆம் திகதி வீதியில் விழுந்து கிடந்த முதியவர் ஒருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த முதியவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, பொதுமக்களிடம் உதவி கோரி உயிரிழந்த முதியவரின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

இந்த புகைப்படத்தில் உள்ள முதியவர் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் கிடைத்தால் சீதுவை பொலிஸ் நிலையத்தின் 071 - 8591637 அல்லது 011 - 2253524 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுமார் 300 கிலோ போதைப்பொருட்களுடன் 6...

2025-11-12 10:41:26
news-image

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளுடன்...

2025-11-12 10:22:56
news-image

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

2025-11-12 09:59:37
news-image

பெருந்தோட்ட மக்களுக்கான தீர்வுகளை மலினப்படுத்தும் எதிர்க்கட்சியின்...

2025-11-12 10:00:34
news-image

வளமான நாடு அழகான வாழ்க்கையை ஏற்படுத்துவதற்கு...

2025-11-12 09:38:17
news-image

குடும்ப நல சுகாதார சேவையில் எழுந்துள்ள...

2025-11-12 09:37:06
news-image

தமிழ் மக்களுக்கு அரசியல் நோக்கமின்றி அபிவிருத்தி...

2025-11-12 09:26:45
news-image

சுற்றுலா செல்லும் போது சமூக வலைதளங்களில்...

2025-11-12 09:25:43
news-image

அடுத்த வருடம் சுகாதார துறையில் பாரிய...

2025-11-12 09:23:49
news-image

இன்றைய வானிலை

2025-11-12 06:42:43
news-image

விதாதா வேலைத்திட்டத்தை அமுல்படுத்த அமைச்சரவை அங்கீகாரம்

2025-11-11 16:48:02
news-image

கிவுல் ஓயாத் நீர்த்தேக்க திட்டத்திற்கான நிதி...

2025-11-11 16:45:18