அய்யாபுரம் தேவி ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா

09 Oct, 2025 | 11:49 AM
image

- கார்த்திகேயன்

இந்தியாவில் தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் அய்யாபுரம் அருள்மிகு தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில் 32வது ஆண்டு பூக்குழி திருவிழா கடந்த 6, 7 மற்றும் 8ஆம் திகதிகளில் நடைபெற்றது. 

திருவிழாவிற்கு முன்னதாக 10 நாட்கள் சிறப்பு அலங்காரத்துடன் சிறப்புப் பூஜைகள் பெருந்திரளான பக்தர்கள் சூழ நடைபெற்றன.

சுமார் 6வது தலைமுறையாக நடத்தி வரும் இத்திருவிழா ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்க்கிழமை அன்று தேவி ஸ்ரீ மாரியம்மனுக்கு மூன்று நாள் சிகர நிகழ்வாக நடைபெற்று வருகிறது.

முதல் சிகர நிகழ்வான ஒக்டோபர் 6ஆம் திகதி  மாலை தீச்சட்டி மற்றும் காவடி ஊர்வலம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து, நள்ளிரவில் தேவி ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு மாக்காப்பு அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. 

தொடர்ந்து, தமிழ் பாரம்பரிய கலை நிகழ்வான கரகாட்டம் அரங்கேறியது. 

சிகர நிகழ்வான இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை காலை நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் முளைப்பாரியை இறை பக்தியுடன் தலையில் சுமந்து ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுசென்று, தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர். 

அடுத்து, பக்த நன்கொடையாளர்களின் உதவியுடன் மதிய அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது. 

மாலை 4.30 மணியளவில் அருள்மிகு சக்தி விநாயகர் ஆலயத்தில் இருந்து குற்றால தீர்த்தம் தொடங்கப்பெற்று சுமார் 6 மணிநேரம் ஊர் முழுவதும் வலம் வந்து இரவு 10.30 மணியளவில் அன்னை தேவி ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலுக்கு சென்றடைந்தது. 

பின்னர், சிறப்பு பூஜை நடைபெற்று, நள்ளிரவு 21 அடி நீளம் கொண்ட பூக்குழி அமைத்து அக்கினி வளர்க்கப்பட்டது. 

மூன்றாவது நாளான நேற்று 8ஆம் திகதி  அதிகாலை 6 மணியளவில் நாதஸ்வர நையாண்டி மேளம் முழங்க, நூற்றுக்கணக்கான பக்தர்கள் புடைசூழ, மக்கள் வெள்ளத்தில் 32வது ஆண்டு பூக்குழி இறங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பூக்குழியினை காணச் சென்ற பக்தர்களுக்காக கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக கோவில் நுழைவாயிலில் அகண்ட LED திரை நிறுவப்பெற்றது.   

பின்னர், பக்தர்கள் தங்களின் நேர்த்திக்கடன்களை செலுத்துதல், முளைப்பாரி கரைத்தல் அதனை தொடர்ந்து மஞ்சள் பால் விளையாட்டு நடைபெற்று, தொடர்ந்து அம்மனுக்கு மகா சிறப்பு பூஜையும் மகா தீபாராதனையும் நடைபெற்றது. 

சிறப்புப் பூஜைக்கு முன்னதாக அன்னை ஸ்ரீமாரியம்மனும் மகன் ஸ்ரீ பைரவரும் பக்தர்களுக்கு கனி வழங்கி அருள் புரிவர்.  விழாவைக் காண அய்யாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அடுத்து, கொக்கிரகுளம் மணிசங்கரம்மாள் வில்லிசை நிகழ்ச்சியும் குத்துக்கல்வலசை திருமலைக்குமார் நையாண்டி மேளமும் அரங்கேறியது. 

இந்த மூன்று நாள் (6, 7 மற்றும் 8) திருவிழாவினை காவல் துறையின் வழிகாட்டுதலுக்கு உட்பட்டு அய்யாபுரம் ஊர் நாட்டாமைகளும் பொதுமக்களும் ஏற்பாடு செய்திருந்தனர். 

இதன்போது பக்தர்களின் பாதுகாப்பினை கருத்திற்கொண்டு தீயணைப்புத்துறை மற்றும் மருத்துவ முதலுதவி குழுவினர் கடமையில் நிறுத்தப்பட்டிருந்தனர்.

மேலும், ஐந்து நாள் கொடை விழா அன்னை தேவி ஸ்ரீ முப்புடாதி அம்மனுக்கு சித்திரை மாதத்திலும், மகன் ஸ்ரீ வைரவருக்கு தை மாதத்திலும் நடைபெறும். 

(புகைப்படங்கள் : சரவணன், விக்ரமன்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தில்...

2026-09-06 15:00:28
news-image

ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி அறநெறிப் பாடசாலை...

2026-09-06 12:01:08
news-image

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா!

2026-09-05 15:58:42
news-image

மட்டக்களப்பில் நான்கு நாட்கள் நடைபெற்ற ‘Hands...

2026-09-05 15:18:22
news-image

நல்லூர் கந்தசுவாமி ஆலய 20ஆம் திருவிழா...

2026-09-05 11:57:07
news-image

ஹொரவப்பத்தானையின் கல்வி முன்னோடிகளை கௌரவித்த ‘விழுதாகும்...

2026-09-04 19:25:27
news-image

கொழும்பு ஸ்ரீ ஹரே கிருஷ்ணா ஆலய...

2026-09-04 17:18:20
news-image

ஜப்பானில் 13-வது சர்வதேச வணிக மாநாடு:...

2026-09-04 14:03:14
news-image

நல்லூர் ஆலய வருடாந்த மகோற்சவம்: ஏழு...

2026-09-04 10:42:58
news-image

நல்லூர் கார்த்திகை திருவிழா

2026-09-04 10:37:07
news-image

நாட்டிய கலா மந்திரின் 50 ஆவது...

2026-09-03 17:52:25
news-image

கப்பித்தாவத்தை, ஸ்ரீ கைலாசநாதர் தேர்த் திருவிழா

2026-09-03 15:13:27