(நெவில் அன்தனி)
கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று புதன்கிழமை (08) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானிடம் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா இறுதியில் 107 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டியது.
இந்தப் போட்டி முடிவுடன் பாகிஸ்தான் தனது 3ஆவது நேரடி தோல்வியைத் தழுவியது.
அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 36.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 114 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுகளை எதிர்கொள்வதில் சிரமப்பட்ட பாகிஸ்தான் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து 13ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 49 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
எனினும் கடைசி 4 விக்கெட்களில் 65 ஓட்டங்கள் பாகிஸ்தானின் மொத்த எண்ணிக்கைக்கு சேர்ந்தது.
முன்வரிசையில் மிகவும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய சித்ரா ஆமின் 35 ஓட்டங்களையும் மத்திய வரிசையில் ரமீன் ஷமின் 15 ஓட்டங்களையும் அணித் தலைவி பாத்திமா சானா 11 ஓட்டங்களையும் பின்வரிசையில் நஷ்ரா சாந்து 11 ஓட்டங்களையும் பெற்றனர்.
உதிரிகளாக 19 ஓட்டங்கள் கிடைத்தது.
பந்துவீச்சில் கிம் கார்த் 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அனாபெல் ஷூட் 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மெகான் ஷூட் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட அவுஸ்திரேலியா ஆரம்பத்தில் தடுமாற்றத்தை எதிர்கொண்ட போதிலும் பெத் மூனி குவித்த அபார சதத்தின் உதவியுடன் 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.
நஷ்ரா சாந்து, ரமீன் ஷமிம், பாத்திமா சானா, சாடியா இக்பால், டயனா பெய்க் ஆகியோரின் பந்துவீச்சுக்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 34ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.
ஆனால், அனுபசாலியான 31 வயதுடைய பெத் மூனி அபார சதம் குவித்து அவுஸ்திரேலியாவை மீட்டெடுத்தார். 10ஆம் இலக்க வீராங்கனை அலனா கிங் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கன்னி அரைச் சதம் குவித்து அசத்தினார்.
அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 9ஆவது விக்கெட்டுக்கான அதிசிறந்த இணைப்பாட்டம் இதுவாகும்.
நோர்த் சிட்னியில் கடந்த வருடம் நடைபெற்ற தென் ஆபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலியாவின் ஏஷ்லி கார்ட்னர், கிம் கார்த் ஆகியோர் பகிர்ந்த 77 ஓட்டங்களே மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்பதாவது விக்கெட்டுக்கான முந்தைய சாதனையாக இருந்தது.
பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.
மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலனா கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
முன்வரிசையில் அணித் தலைவி அலிசா ஹீலி 20 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
ஆட்டநாயகி: பெத் மூனி















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM