பாகிஸ்தானிடம் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியாவை பெத் மூனியின் அபார சதம் மீட்டெடுத்தது; அலானாவும் சிறந்த பங்களிப்பு

08 Oct, 2025 | 09:55 PM
image

(நெவில் அன்தனி)

கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 9ஆவது போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் பந்துவீச்சில் தடுமாறிய நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, பெத் மூனியின் அபார சதத்தின் உதவியுடன் மீண்டெழுந்தது.

தனது முதலிரண்டு போட்டிகளில் பங்களாதேஷிடமும் இந்தியாவிடமும் தோல்விகளைத் தழுவிய பாகிஸ்தான், இன்றைய போட்டியில் தனது பந்துவீச்சின் மூலம் அவுஸ்திரேலியாவுக்கு வித்தை காட்டியது. 

பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட அவுஸ்திரேலியா 34ஆவது ஓவரில் 8 விக்கெட்களை இழந்து 115 ஓட்டங்களைப் பெற்று தடுமாறிக்கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் நஷ்ரா சாந்து 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 2 விக்கெட்களையும் பாத்திமா சானா, சாடியா இக்பால், டயனா பெய்க் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தனர்.

இதன் காரணமாக குறைந்த மொத்த எண்ணிக்கைக்கு சுருண்டு வீழ்ந்துவிடுமோ என அஞ்சப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் பாகிஸ்தான் தனது பிடியைத் தளரவிட, அனுபசாலியான 31 வயதுடைய பெத் மூனி அபார சதம் குவித்து அவுஸ்திரேலியாவை மீண்டெழச் செய்தார். 10ஆம் இலக்க வீராங்கனை அலான கிங் பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி கன்னி அரைச் சதம் குவித்து அசத்தினார்.

அவர்கள் இருவரும் 9ஆவது விக்கெட்டில் சாதனைமிகு 106 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

இதன் மூலம் அவுஸ்திரேலியா 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 221 ஓட்டங்களைப் பெற்றது.

பெத் மூனி 114 பந்துகளை எதிர்கொண்டு 11 பவுண்டறிகளுடன் 109 ஓட்டங்களைப் பெற்று கடைசிப் பந்தில் ஆட்டம் இழந்தார்.

மகளிர் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த துடுப்பாட்ட ஆற்றலை வெளிப்படுத்திய அலான கிங் 49 பந்துகளில் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் அடங்கலாக 51 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

முன்வரிசையில் அணித் தலைவி அலிசா ஹீலி 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் நஷ்ரா சாந்து 37 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ரமீன் ஷமிம் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாத்திமா சானா 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

222 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பாகிஸ்தான் இன்னும் சற்று நேரத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாபர் அஸாம் சதம், ஸமான், ரிஸ்வான்...

2025-11-15 02:31:08
news-image

பாகிஸ்தானுடனான 2ஆவது சர்வதேச ஒருநாள் போட்டியில்...

2025-11-14 19:27:42
news-image

பும்ராவின் 5 விக்கெட் குவியலின் பலனாக...

2025-11-14 18:36:10
news-image

பிக்கிள் பால் விளையாட்டுப் போட்டி வீரர்களை...

2025-11-14 18:35:04
news-image

இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில்...

2025-11-14 15:08:13
news-image

குழப்பகரமான சூழ்நிலைக்கு பின்னர் இலங்கை -...

2025-11-14 13:37:02
news-image

முல்லைத்தீவு உள்ளக அரங்கில் மாகாண மல்யுத்த...

2025-11-14 12:49:19
news-image

கிரிக்கெட் சுற்றுப்பயணத்தைத் தொடர்ந்ததற்காக இலங்கைக்கு பாகிஸ்தான்...

2025-11-14 12:36:16
news-image

இந்தியாவில் கடினமான டெஸ்ட் தொடரை சந்திக்கவுள்ள...

2025-11-13 19:51:15
news-image

தங்க நாணயம் மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்...

2025-11-13 18:47:21
news-image

பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணியினரின் உயிர்பாதுபாப்பு...

2025-11-13 17:17:18
news-image

தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொடுப்பதே வர்த்தக கிரிக்கெட்...

2025-11-13 16:20:06