(நெவில் அன்தனி)
லங்கா ஸ்போர்ட்ரைஸென் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 19ஆவது எல்எஸ்ஆர் கலம்போ மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஒரு நிமிட வித்தியாசத்தில் தங்கத்தை கே. சண்முகேஸ்வரன் தவறவிட்டார்.
அப் போட்டியில் கென்ய வீரர் எலியாஸ் நியாகா முத்தோனி தங்ப் பதக்கத்தை சுவீகரித்தார். பெண்கள் பிரிவிலும் கென்யாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்தது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான முழு மரதன், அரை மரதன், மூத்தவர்களுக்கான முழு மரதன், அரை மரதன், இருபாலாருக்குமான 10 கிலோ மீற்றர் மற்றும் 5 கிலோ மீற்றர் கேளிக்கை ஒட்டம் என்பன நடைபெற்றதுடன் இப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் உட்பட 2000 பேர் வரை பங்குபற்றினர்.
பிரதான மரதன் ஓட்டப் போட்டி கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையிலிருந்து நீர்கொழும்பு கடற்கரைவரை கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டிகளில் கென்யர்கள் வெற்றிபெற்று தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்தினர்.
ஆண்களுக்கான மரதன் ஒட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 25 நிமிடங்கள், 35 செக்கன்களில் நிறைவுசெய்த கென்ய வீரர் எலியாஸ் நியாகா முத்தோனி தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
அப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 26 நிமிடங்கள், 30 செக்கன்களில் நிறைவுசெய்த ஹட்டன் வெலிஓயா தோட்டத்தைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் இரண்டாம் இடத்தைப் பெற்று வெள்ளிப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
இலங்கையின் மற்றொரு வீரர் உதார சானக்க ரூபசிங்க (2:27.02 வெண்கலப் பதக்கத்தை வென்றெடுத்தார்.
பெண்களுக்கான மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 58 நிமிடங்கள், 20 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தைப் பெற்ற கென்ய வீராங்கனை கரோலின் செரோனோ தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இலங்கை வீராங்கனைகளான மதுஷானி ஹேரத் (3:03.20) வெள்ளிப் பதக்கத்தையும் சமில சிறிவர்தன (3:12.33) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
அரை மரதன் முடிவுகள்
ஆண்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் முதல் பத்து இடங்களையும் இலங்கையர்கள் பெற்று அசத்தினர்.
டி. குணசேகர (1:09.08) தங்கப் பதக்கத்தையும் முத்துசாமி சிவராஜன் (1:09.11) வெள்ளிப் பதக்கத்தையும் விமல் காரியவசம் (1:10.19) வெண்கலப் பதக்கத்தையும் வென்றெடுத்தனர்.
பெண்கள் பிரிவில் நயனா செவ்வந்தி (1:19.39), சாமினி சமுதிக்கா ஹேரத் (1:21.19), நிமேஷா நிதர்ஷனி ((1:30.12) ஆகியோர் முறையே தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்றெடுத்தனர்.
மூத்தவர்களுக்கான மரதன்
மூத்தவர்களுக்கான (வெட்டரன்ஸ்) மரதன் ஓட்டப் போட்டியில் இலங்கையின் ஜேம்ஸ் லேவான் வைமன் (4:09.25) தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார்.
இப் பிரிவில் ஜப்பான் வீரர் தக்காயுக்கி ஒட்சுக்கி (4:41.31) வெள்ளிப் பதக்கத்தையும் இலங்கை வீரர் ஷக்கி எதிரிசிங்க (4:45.10) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
மூத்தவர்களுக்கான அரை மரதன் ஓட்டப் போட்டியில் அமெரிக்காவின் டேவிட் ஒஸ்வோல்ட் (1:56.29) தங்கப் பதக்கத்தையும் இலங்கை வீரர்களான எஸ்.எம். பந்துல (1:57.24), அஹ்மத் தாரிக் ராஸிக் ((2:05.09) ஆகியோர் முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களையும் வென்றெடுத்தனர்.
இவற்றைவிட இருபாலாருக்கும் நடத்தப்பட்ட 10 கிலோ மீற்றர் மற்றும் 5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட கேளிக்கை ஓட்டப் போட்டிகளில் இலங்கையர்கள் முதல் மூன்று இடங்களைப் பெற்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM