நீதி அமைச்சின் மேலதிக செயலாளருக்கு பிணை!

08 Oct, 2025 | 05:58 PM
image

நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் ராஜபக்ஷ பதிரகே சேபாலிகா சமன் குமாரியை பிணையில் விடுதலை செய்யுமாறு  கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை மகாவலி அதிகாரசபைக்குச் சொந்தமான அரச காணிக்குரிய நஷ்டஈட்டு கொடுப்பனவு தொடர்பாக ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றச்சாட்டுக்களின் கீழ் நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் இன்று கைதுசெய்யப்பட்டார்.

கைதுசெய்யப்பட்ட நீதி அமைச்சின் மேலதிக செயலாளர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இதே குற்றச்சாட்டில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்ட 1500 கிலோவிற்கும்...

2025-11-15 04:10:11
news-image

இலங்கை இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு...

2025-11-15 03:47:28
news-image

யாழில் கஞ்சா கலந்த மாவா மற்றும்...

2025-11-15 02:35:54
news-image

மட்டக்களப்பு வைத்தியசாலையில் கைபேசிகள் திருடிய இளைஞன்...

2025-11-14 23:00:58
news-image

பாராளுமன்றத்தில் தகாத வார்த்தைகள், குற்றச்சாட்டுகள் தவிர்க்கப்பட...

2025-11-14 15:50:45
news-image

எதிரணியை பெருந்தோட்ட மக்கள் கடுமையாக எதிர்க்க...

2025-11-14 17:02:07
news-image

323 சர்ச்சைக்குரிய கொள்கலன்களில் ஆயுதங்கள் இருந்தன...

2025-11-14 15:51:14
news-image

ஜனாதிபதியின் போதைப்பொருள் ஒழிப்பு செயற்றிட்டத்தக்கு ஆதரவு...

2025-11-14 17:04:27
news-image

வடக்கு மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு இந்த...

2025-11-14 15:52:06
news-image

பிரஜா சக்தி வறுமை ஒழிப்பு தேசிய...

2025-11-14 16:59:24
news-image

பெருந்தோட்ட மக்களுக்கு 200 ரூபா சம்பளத்தை...

2025-11-14 17:03:23
news-image

யாழில் விளையாட்டு வினையானது; குடும்பஸ்தர் உயிரிழப்பு!

2025-11-14 20:00:17