தனது சாத­னை­களை யாராலும் முறி­ய­டிக்க முடி­யாது என்று 100 மீற்றர் ஓட்­டப்­பந்­த­யத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சம்­பி­ய­னான ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் தெரி­வித்­துள்ளார்.

100 மீற்றர் ஓட்­டப்­பந்­த­யத்தில் ஒலிம்பிக் மற்றும் உலக சாம்­பி­ய­னான ஜமைக்கா வீரர் உசைன் போல்ட் அளித்­துள்ள ஒரு பேட்­டியில், இப்­போதும் உலகின் அதி­வேக மனிதன் நான்தான். அதில் எந்த சந்­தே­கமும் இல்லை. எனது சாத­னை­களை யாராலும் முறி­ய­டிக்க முடி­யாது என்று நம்­பு­கிறேன்.

எனது குழந்­தைகள் 20 வயதை எட்டும் போது, இப்­போதும் நான் உலகின் சிறந்த ஓட்­டப்­பந்­தய வீரர் என்று அவர்­க­ளிடம் பெரு­மை­யோடு கூற விரும்­பு­கிறேன் என்றார். ஊக்­க­ம­ருந்து பயன்­ப­டுத்­து­வோரை எந்த கார­ணத்தை கொண்டும் போட்­டி­களில் அனு­ம­திக்­கக்­கூ­டாது. இல்­லா­விட்டால் விளை­யாட்டே மடிந்து போய் விடும் என்றும் அவர் கூறினார்.

ஒலிம்­பிக்கில் 8 தங்கப் பதக்கங்கள் வென்­ற­வ­ரான 30 வய­தான உசைன் போல்ட் 100 மீற்றர் ஓட்­டத்­திலும் (9.58 வினாடி), 200 மீட்டர் ஓட்­டத்­திலும் (19.19 வினாடி) உலக சாத­னை­யா­ள­ராக வலம் வரு­கிறார். 

லண்­டனில் இன்று தொடங்கும் உலக தட­கள போட்­டி­யுடன் அவர் ஓய்வு பெற­வுள்ளார். இதில் அவ­ரது 100 மீற்றர் ஓட்­டப்­பந்­தயம் நாளை 5ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது.