நட்டி நட்ராஜ் நடிக்கும் 'கம்பி கட்ன கதை' படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீடு

08 Oct, 2025 | 03:33 PM
image

ஒளிப்பதிவாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கம்பி கட்ன கதை' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் ராஜ நாதன் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள 'கம்பி கட்ன கதை ' எனும் திரைப்படத்தில் நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, முகேஷ் ரவி, ஸ்ரீ ரஞ்சனி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், கராத்தே கார்த்தி, முருகானந்தம், முத்துராமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம் ஆர் எம் ஜெய் சுரேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சதீஷ் செல்வம் இசையமைத்திருக்கிறார்.

நகைச்சுவையை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை மங்காத்தா மூவிஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரவி தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 17 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தைப் பற்றி தயாரிப்பாளர் ரவி பேசுகையில், '' நகைச்சுவை மிகுந்த ஆன்மீகவாதியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதையை உருவாக்கினோம். நட்டிசார் இப்படத்தின் கதையைக் கேட்டவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.

அத்துடன் சில மாற்றங்களை செய்து படத்தை முழுமையான நகைச்சுவை படைப்பாக  உருவாக்கியிருக்கிறார். ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் தீபாவளி விருந்தாக இந்தப் படம் இருக்கும்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதர்ஸ் - திரைப்பட விமர்சனம்

2025-11-07 17:43:23
news-image

புதுமுக நடிகர் மதி நடிக்கும் 'கும்கி...

2025-11-07 17:13:13
news-image

சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பராசக்தி' படத்தில் முதல்...

2025-11-07 16:59:16
news-image

சேர்.பொன்.இராமநாதன் காண்பிய ஆற்றுகைக் கலைகள் பீடத்தின்...

2025-11-07 16:10:59
news-image

தனுஷ் நடிக்கும் 'தேரே இஷ்க் மே'...

2025-11-07 15:47:19
news-image

சாதனை படைத்து வரும் துல்கர் சல்மான்...

2025-11-07 15:31:25
news-image

இணையத்தை அதிர வைக்கும் பிரபுதேவா பட...

2025-11-07 15:23:24
news-image

டிஜிட்டல் தளங்களிலும் ஆரியன் படத்திற்கு சிறப்பான...

2025-11-07 15:09:59
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'லஷ்மி காந்தன்...

2025-11-06 16:56:38
news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'தோட்டம் -...

2025-11-06 16:56:26
news-image

செல்ல பிராணியான நாய்களுக்கு பயிற்சி அளிக்கும்...

2025-11-06 16:56:06
news-image

'ஆக்சன் கிங்' அர்ஜுன் - ஐஸ்வர்யா...

2025-11-06 16:55:47