உல­க­ளா­விய ரீதியில்  கண் பார்­வை­யற்­ற­வர்கள்  தொகை  எதிர்­வரும் 2050 ஆம் ஆண்டுக்குள்    3  மடங்­காக அதி­க­ரிக்­க­வுள்ள­தாக  ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

அங்­லியா ரஸ்கின் பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த  ஆய்­வா­ள­ரான ருபேர்ட் போர்னி தலை­மை­யி­லான குழு­வி­னரால் மேற்­கொள்­ளப்­பட்ட  மேற்­படி ஆய்வின் முடி­வுகள்  லான்செட் குளோபல் ஹெல்த்  ஆய்­வேட்டில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

சிறந்த நிதி வசதி மூலம் சிகிச்­சைகள் மேம்­ப­டுத்­தப்­ப­டா­விட்டால் 2050 ஆம் ஆண்­டுக்குள்  கண்­பார்வை இழந்­த­வர்கள் தொகை 36  மில்­லி­ய­னி­லி­ருந்து 115  மில்­லி­ய­னாக அதி­க­ரிக்கும் அபா­ய­முள்­ள­தாக ஆய்­வா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

வய­தா­ன­வர்­க­ளது சனத்­தொகை அதி­க­ரிப்­பதே  மேற்­படி பிரச்­சி­னைக்குக் காரணம் என அவர்கள் கூறு­கின்­றனர்.

உலகில்  கண்­பார்வைக் குறை­பா­டுள்­ள­வர்­க­ளது சத­வீதம்  வீழ்ச்­சி­ய­டைந்­துள்ள போதும்  உலக சனத்­தொகை வளர்ச்­சி­யுடன் வய­தா­ன­வர்கள் தொகை அதி­க­ரிப்­பது   பார்வை இழந்­த­வர்கள் தொகை அதி­க­ரிப்­புக்கு பங்­க­ளிப்புச் செய்­வ­தா­க­வுள்­ள­தாக  அவர்கள் மேலும் தெரி­விக்­கின்­றனர்.

இந்த ஆய்­வா­னது 180  நாடு­களைச் சேர்ந்த  சுமார்  200  மில்­லியன் பேரை உள்­ள­டக்கி மேற்­கொள்­ளப்­பட்­டது. குருட்டுத் தன்மை  ஒரு­வ­ரது சுதந்­தி­ரத்தை குறைப்­ப­துடன் கல்வி மற்றும் பொரு­ளா­தார வாய்ப்­பு­க­ளையும் வரை­ய­றுப்­ப­தா­க­வுள்­ளது என தெரி­விக்கும் ஆய்­வா­ளர்கள்,   பார்வைக் குறை­பாட்டால்  தென் மற்றும் கிழக்கு ஆசிய நாடு­களைச் சேர்ந்­த­வர்­களே  அதி­க­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாகக் கூறு­கின்­றனர். அத்­துடன்  ஆபி­ரிக்­காவின் சில பிராந்­தி­யங்­களைச் சேர்ந்த மக்­களும் பார்வைக் குறை­பாட்டால்  பெரு­ம­ளவில் பாதிக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இதன் கார­ண­மாக கண்­புரை நோய்க்­கான அறுவைச் சிகிச்சை   மற்றும் பார்­வையைச் சீர்­செய்யும் வகை­யி­லான சரி­யான மூக்குக் கண்­ணா­டிகள்  என்­ப­வற்றை பாதிக்­கப்­பட்­ட­வர்கள் பெற்றுக் கொள்­வதை உறுதி செய்ய  அவற்றில்   அதி­க­ளவில்  முத­லீட்டை மேற்­கொள்ள  ஆய்வாளர்கள் அர­சாங்­கங்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்­ளனர்.