கார்த்தி நடிக்கும் 'வா வாத்தியார்' பட அப்டேட்ஸ்

08 Oct, 2025 | 03:08 PM
image

கடந்த ஆண்டில் 'மெய்யழகன்' என்ற உணர்வு பூர்வமான படைப்பில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்த புதிய தகவலை படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி உள்ள'  வா வாத்தியார்' எனும் திரைப்படத்தில் கார்த்தி, கிருத்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், ஜி. எம். சுந்தர், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

ஜோர்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். நகைச்சுவை படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார்.

இந்தத் திரைப்படம் கடந்த ஆண்டே படமாளிகையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. தயாரிப்பாளரின் நிதி சிக்கல் காரணமாக வெளியீட்டில் தாமதத்தை சந்தித்த இந்தத் திரைப்படம் - எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது கார்த்தியின் ரசிகர்களை உற்சாகமடைய செய்து இருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்