தமிழ் திரையுலகில் ஏராளமான நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் திரைப்படங்களை தயாரித்து வரும் முன்னணி தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கே .கணேஷ் புதிதாக 'வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல்' எனும் இசை நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார்.
அவரது பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட இந்த இசை நிறுவனத்தின் அறிமுக விழாவில் தமிழ் திரையிசையுலகின் முன்னணி நட்சத்திர இசைக் கலைஞர்களான ஏ. ஆர். ரஹ்மான் - அனிருத்- டி. இமான்- உள்ளிட்ட பலர் பங்கு பற்றினர்.
வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் பற்றி அதன் உரிமையாளரும், நிறுவனருமான தயாரிப்பாளர் ஐசரி கே .கணேஷ் பேசுகையில், '' சர்வதேச இசை உலகில் நிகழும் மாற்றங்களுடன் நாமும் இணைந்து முன்னேற வேண்டும்.
ஏராளமான தமிழ் திறமைசாலிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவரும் வகையில் இந்த வேல்ஸ் மியூசிக் இன்டர்நேஷனல் தொடங்கப்பட்டிருக்கிறது'' என்றார்.
மேலும் இந்த இசை நிறுவனம் சர்வதேச அளவிலான சுயாதீன இசைக்கலைஞர்களுக்கும், அவர்கள் உருவாக்கும் சுயாதீன இசை படைப்புகளுக்கும் வாய்ப்பு வழங்கி.. அவர்களுடன் இணைந்து பணியாற்றும் என்றும், விரைவில் இந்த இசை நிறுவனத்தில் இருந்து இசை அல்பங்கள் -விடியோ இசை அல்பங்கள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM