கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சையும் புலமைப்பரிசில் பரீட்சையும் இடம்பெறும் பரீட்சை மத்திய நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாடு முழுவதிலும் இம்முறை கல்வி பொதுத்தராதர உயர்தரப்பரீட்சை எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் செப்டெம்பர் 2 ஆம் திகதிவரை 2230 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் தரம் 5 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பரீட்சை நிலையங்களிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் குறித்த பரீட்சை நிலையங்களில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டமொன்று இந்த வாரம் முதல் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனடிப்படையில் பரீட்சை நிலையங்களில் புகை விசுறுதல், டெங்கு நுளம்பு பரவக்கூடிய வகையில் காணப்படும் சூழலை மாற்றியமைத்தல் முதலான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சுக்கு பரீட்சைகள் திணைக்களம் அறிக்கையின் மூலம் அறிவித்திருந்த நிலையிலேயே இந்நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளன. இதேவேளை பரீட்சை நடைபெறும் தினங்களில் நுளம்புகளிலிருந்து பிள்ளைகளை பாதுகாக்க நுளம்புக்கடி தடுப்பு பூச்சுக்களை பூசி அனுப்புமாறும் பரீட்சைகள் திணைக்களம் பெற்றோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM