இன்றைய சூழலில் சில பிள்ளைகளுக்கு குறிப்பாக ஒரு வயது முதல் மூன்று வயது வரை உள்ள பிள்ளைகளுக்கு அவர்களுடைய சீரான சுவாசத்திற்காக நெபுலைசேஷன் எனப்படும் சிகிச்சை அவசியமாகிறது.
இந்தத் தருணத்தில் பெற்றோர்கள் இத்தகைய நெபுலைசேஷன் சிகிச்சையை தொடர்ந்து பாவித்தால்.... பிள்ளைகளுக்கு எதிர்காலத்தில் ஓஸ்துமா பாதிப்பு ஏற்படுமா..? என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இது தொடர்பான விளக்கத்தை வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு அளிக்கிறார்கள்.
''பொதுவாக ஒரு வயது முதல் மூன்று வயது வரையிலான பிள்ளைகளுக்கு நெபுலைசேஷன் எனும் சிகிச்சை முறை நுரையீரலின் சீரான இயக்கத்திற்காக தேவைப்படுகிறது. இந்த நெபுலைசேஷனை ஒரு பிள்ளைக்கு மாதத்தில் எத்தனை முறை வழங்கப்படுகிறது..! அந்தப் பிள்ளையின் பெற்றோர்களுக்கு ஏதேனும் ஓஸ்துமா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா..? என்பது குறித்தும் அவதானிப்பார்கள்.
காய்ச்சல் இல்லாமல் உங்களுடைய பிள்ளைகளுக்கு அடிக்கடி சளி தொந்தரவு ஏற்பட்டாலோ... அல்லது பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டாலோ.. அல்லது வேறு சில காரணங்களுக்காகவோ நெபுலைசேஷன் சிகிச்சையை மேற்கொண்டால்.... எதிர்காலத்தில் ஓஸ்துமா பாதிப்பு வருவதற்கான சாத்திய கூறுகள் உண்டு.
அதே தருணத்தில் ஒன்று முதல் மூன்று வயது வரை உள்ள குழந்தைகளில் பத்து பிள்ளைகள் நெபுலைசேஷன் எனும் சிகிச்சையை மேற்கொண்டால்... அதில் இரண்டு அல்லது மூன்று பிள்ளைகளுக்கு மட்டுமே ஓஸ்துமா பாதிப்பு வரக்கூடும் என குறிப்பிடலாம்.
மீதமுள்ள பிள்ளைகளுக்கு அத்தகைய பாதிப்பு நாளடைவில் தானாகவே சீராகிவிடும். இதன் காரணமாக வைத்தியர்களின் பரிந்துரை மற்றும் அறிவுரையின் பெயரில் மட்டுமே பிள்ளைகளுக்கு நெபுலைசேஷன் எனும் சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார்கள்.
வைத்தியர் முஹம்மத் ஃபாசில் தொகுப்பு அனுஷா















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM