Euromoney Awards for Excellence 2025 விருதுகள் நிகழ்வில் சூழல், சமூகம், மற்றும் நிர்வாக ஆட்சி (Environmental, Social, and Governance - ESG) ஆகியவற்றில் இலங்கையின் மிகச் சிறந்த வங்கி என்ற அங்கீகாரத்தை சம்பத் வங்கி சம்பாதித்துள்ளது.
தமது பிரதான மூலோபாயங்களினுள் நிலைபேற்றியலை உட்புகுத்தி, தம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் நீண்ட கால மதிப்பைத் தோற்றுவிப்பதில் பல்வேறு சர்வதேச மற்றும் பிராந்திய வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் அடங்கிய மதிப்பிற்குரிய நிறுவனங்கள் மத்தியில் சம்பத் வங்கி இந்த அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ளதுடன், இவ்விருது சிங்கப்பூரில் வைபவரீதியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சூழல்நேய முயற்சிகளுக்கான கடன் வழங்கல் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்களுக்கு ரூபா 1.44 பில்லியன் (4.78 மில்லியன் அமெரிக்க டொலர்) தொகையை வழங்கியமை, தூய்மையான எரிசக்திக்கான அணுகலை அதிகரிப்பதற்காக சூரிய மின்னுற்பத்திக் கடன்களுக்கான சலுகைகளை அறிமுகப்படுத்தியமை, மற்றும் 1,418 ஊழியர்கள் மற்றும் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களுக்கு ESG குறித்த பயிற்சி வழங்கியமை உள்ளிட்ட பல முக்கிய சாதனை இலக்குகளை 2024ம் ஆண்டில் நிலைநாட்டியிருந்த சம்பத் வங்கி அவற்றை Euromoney விருதுகளுக்கான சமர்ப்பிப்பில் சுட்டிக்காட்டியிருந்தது.
நிறுவனத்தின் உள்ளக மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சிகள் வங்கியின் காபன் உமிழ்வை 8மூ ஆல் குறைக்க உதவியுள்ளதுடன், கிளை வலையமைப்பின் மத்தியில் சூரிய மின்னுற்பத்தியை 36மூ ஆல் அதிகரிப்பதற்கும் பங்களித்துள்ளன. பிளாஸ்திக் பயன்பாட்டைக் குறைக்கும் அதேசமயம், அதன் பரந்தளவிலான கழிவைக் குறைக்கும் நிகழ்ச்சித்திட்டங்களை வலுப்படுத்தும் வகையில் மீள்சுழற்சி செய்யப்படக்கூடிய உலோக கடனட்டைகளையும் சம்பத் வங்கி அறிமுகப்படுத்தியிருந்தது.
சம்பத் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளராக நியமிக்கப்படவுள்ள சஞ்சய குணவர்த்தன அவர்கள் இச்சாதனை குறித்து கருத்து தெரிவிக்கையில், “இலங்கையின் ESG க்கான சிறந்த வங்கியாக Euromoney ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை சம்பத் வங்கியைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானதொரு தருணம்.
எமது வர்த்தகத்தின் முக்கியமான தூணாக நிலைபேற்றியலைப் பேணுவதில் எமது ஆழமான அர்ப்பணிப்பையும், தேசத்தின் மீதான எமது பொறுப்புணர்வையும் இக்கௌரவம் சிறப்பாகப் பிரதிபலிக்கின்றது. நிறுவன ஆட்சி, சூழல்நேய முயற்சிகளுக்கான நிதி வசதி, தயாரிப்பு குறித்த புத்தாக்கம், மற்றும் திறன் மேம்பாடு ஆகியன குறுகிய கால செயற்திட்டங்களாக அன்றி, இலங்கைக்கு இன்னும் கூடுதலான அளவில் நிலைபேணத்தக்க எதிர்காலத்தைச் செதுக்குகின்ற நீண்ட கால நோக்குடனான அர்ப்பணிப்புக்களாகும்.
இப்பயணத்தில் தொடர்ந்தும் எமக்கு தோள்கொடுத்துள்ள எமது அணி, மதிப்புமிக்க எமது வாடிக்கையாளர்கள், மற்றும் எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினரதும் அர்ப்பணிப்பிற்கு கிடைத்துள்ள கௌரவமாக இந்த அங்கீகாரம் காணப்படுகின்றது.”
விவசாயத்தில் ஈடுபட்டுள்ள சமூகங்களுக்காக பாரம்பரிய நீர்த்தேக்கங்களை புனரமைப்புச் செய்யும் ‘வாவிகளுக்கு வாழ்வளிப்போம்’, பவளப் பாறைகளை மீட்டெடுப்பதற்காக ‘சமுத்திரத்திற்கு உயிர்மூச்சு’, மற்றும் கடல் ஆமைகள் பாதுகாப்பு மற்றும் கண்டல் தாவர வளர்ப்பு செயற்திட்டங்கள் அடங்கலாக, அதன் பிரதான நிறுவன சமூகப் பொறுப்புணர்வு முயற்சிகளின் வெளிப்பாடாக சம்பத் வங்கிக்கு கிடைத்துள்ள அங்கீகாரம் காணப்படுகின்றது.
இவற்றுடன் இணைந்து, 88 பாடசாலைகளில் மரநடுகை நிகழ்ச்சித்திட்டம், சூழல்நேய முயற்சிகளுக்கான நிதி வசதி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றின் மீதான வலுவான கவனம் ஆகியன நிலைபேற்றியல் மற்றும் ESG ஒருங்கிணைப்பில் ஆழமாக வேரூன்றியுள்ள வங்கியின் அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகின்றன.
நிதிச் சேவைகள் துறையில் மிகவும் நன்மதிப்புப் பெற்றுள்ள பாராட்டு அங்கீகாரங்கள் மத்தியில் Euromoney Awards for Excellence விருதுகள் காணப்படுகின்றன.
ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக, வங்கிச்சேவை மற்றும் மூலதனச் சந்தைகளில் முன்னணி அதிகார அமைப்பாகத் திகழ்ந்து வருகின்ற, ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்ட வெளியீடான Euromoney ஆல் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்ற இவ்விருதுகள், 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் புத்தாக்கம், நெகிழ்திறன், மற்றும் தலைமைத்துவம் ஆகியவற்றிற்கான தரஒப்பீட்டு நியமமாகத் திகழ்கின்றன.
பொறுப்புணர்வுமிக்க வங்கிச்சேவை குறித்த விரிவான அணுகுமுறையுடன், நிர்வாக ஆட்சிக் கட்டமைப்புக்கள், நிலைபேணத்தக்க நிதி வசதி முயற்சிகள், தயாரிப்பு புத்தாக்கம், திறன் மேம்பாடு, மற்றும் சர்வதேச தராதரங்களுடனான ஒன்றிப்பு ஆகிய அம்சங்களில் நிறுவனங்கள் ESG பிரிவுக்காக மதிப்பீடு செய்யப்படுகின்றன.
நிலைபேணத்தக்க நிதி வசதியில் சம்பத் வங்கியின் தலைமைத்துவம் மற்றும் அனைவருக்கும் வாய்ப்பளித்து, பொறுப்புள்ள பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதில் நம்பிக்கைக்குரிய கூட்டாளர் என்ற தனது வகிபாகத்தை இந்த அங்கீகாரத்தின் மூலமாக அது மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. இலங்கைக்கும், இங்குள்ள மக்களுக்கும் நீண்ட கால மதிப்பு உருவாக்கத்தை உறுதி செய்து, தனது செயல்பாடுகளின் அனைத்து அம்சங்கள் மத்தியிலும் ESG ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதில் வங்கி தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM