கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட விரிசல் குறைவதற்கான பிரத்யேக குறிப்பு...!?

08 Oct, 2025 | 02:45 PM
image

இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் அவர்களுடைய பெற்றோர்களின் ஆசியுடனும் ... ஆசியில்லாமலும் ... இல்லற வாழ்க்கையை தொடங்குகிறார்கள்.

காதலித்து திருமணம் செய்து கொண்டவர்களும்... பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் செய்து கொண்டவர்களும்... நாளடைவில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவன்- மனைவி இடையே விரைவில் விரிசல் ஏற்படுகிறது.

இத்தகைய விரிசல் அவர்களுடைய உடல் நலத்தை மட்டுமல்லாமல் உளவியல் வலிமையையும் சிதைப்பதால் இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என முன்னோர்கள் குறிப்பிடுகிறார்கள்.

குறிப்பாக கணவன்- மனைவி இடையே சகிப்புத்தன்மையுடன் விட்டுக் கொடுக்க வேண்டும் என கற்பிக்கிறார்கள். ஆனால் இன்றைய இளைய தலைமுறையினர் உயர்கல்வி வரை எளிதாக கற்பதால்.. தங்களுக்கான சுய அடையாளத்தை உருவாக்கிக் கொள்வது போல்... பாலினம் சார்ந்த சுய கௌரவத்தையும் ஏற்படுத்திக் கொள்கிறார்கள்.

இதன் காரணமாக கருத்து வேறுபாடு ஏற்பட்டால்.. நீயா? நானா? என்ற ஈகோ மோதல் எளிதாக ஏற்படுகிறது. இந்நிலையில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இதுபோன்ற ஈகோ மோதலால் கணவன்- மனைவி இடையேயான விரிசலை சீராக்குவதற்கான பிரத்யேக குறிப்பினை வழங்கி இருக்கிறார்கள்.

கால் கிலோ மல்லிகை பூவை வாங்கி, அதை அன்றிரவு நீரில் ஊற வைத்து... அடுத்த நாள் காலையில் அந்த நீரில் நீராடினால்.... கணவன் - மனைவி இடையே விரிசல் குறைந்து, அன்பு மிகும்.

பாதிக்கப்படுவது பெண்ணாக இருந்தால்... பெண் தன்னுடைய கணவன் மீதான திருமண பந்தத்தை சச்சரவின்றி நீடிக்க வேண்டும் என விரும்பினால் செவ்வாழைப்பழத்தை வாங்கி, அந்த பழத்துடன் குங்கும பூவை கலந்து சாப்பிட வேண்டும்.‌

இது நடைமுறையில் சாத்தியம் இல்லை என எண்ணும் இளம் பெண்மணிகள் அசலான தாழம்பூ குங்குமத்தை வாங்கி, செவ்வாய்க்கிழமைகளில் முருகப்பெருமானுக்கு அர்ச்சனை செய்து வந்தால்.... கணவருடன் ஏற்பட்ட பிணக்கிற்கு தீர்வு கிடைக்கும்.

தொகுப்பு: சுபயோக தாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தொழிலில் தடைகளை அகற்றி வெற்றி பெறுவதற்கான...

2025-11-14 17:37:55
news-image

வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான சூட்சமமான வழிமுறை..!?

2025-11-13 12:20:01
news-image

தங்க நகையை வாங்கியவுடன் அணியலாமா...?

2025-11-12 16:04:31
news-image

தீய பழக்கங்களை கைவிடுவதற்கான சூட்சும குறிப்பு..!

2025-11-11 17:44:15
news-image

தன வரவை மேம்படுத்துவதற்கான பிரத்யேக வழிபாடு..!

2025-11-10 18:48:53
news-image

பிறவி கர்மாவை கழிப்பதற்கான சூட்சம குறிப்பு..!?

2025-11-08 18:14:04
news-image

இல்லங்களில் தன வரவு அதிகரிப்பதற்கான சூட்சம...

2025-11-07 17:21:54
news-image

கடன் சுமையை குறைப்பதற்கான பிரத்யேக வழிபாடு

2025-11-06 16:54:52
news-image

செல்வ வளம் மேம்படுவதற்கான பிரத்யேக வழிபாடு

2025-11-04 18:22:32
news-image

ராஜயோகத்தை அள்ளித்தரும் பிரத்யேக வழிபாடு

2025-11-03 17:27:01
news-image

2025 நவம்பர் மாத ராசி பலன்கள்

2025-11-02 10:17:00
news-image

வறுமையை நீக்கி செல்வ வளத்தை உண்டாக்கும்...

2025-11-01 15:17:56