இசையுலகில் குறிப்பாக தமிழ் திரையிசையில் புதிய பாணிகளை முயற்சி செய்யும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழ் ரசிகர்களுக்கு மரபு ரீதியாக அறிமுகமான கர்நாடக இசையையும், தமிழ் ரசிகர்களின் வரவேற்பில் இருக்கும் றாப் இசையையும் அற்புதமாக கலந்து... 'இசைப்புயல்' ஏ. ஆர். ரஹ்மான் உருவாக்கிய 'அப்டி அப்டி' எனும் பாடலுக்கு ரசிகர்களிடம் ஏகோபித்த ஆதரவு கிடைத்து வருகிறது.
இயக்குநர் அர்ஜுனன் ஜே ஆர் இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜீனி' எனும் திரைப்படத்தில் ரவி மோகன், கிருத்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், தேவயானி, வாமிகா கபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
மகேஷ் முத்துசுவாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஃபேண்டஸி ஜேனரிலான இந்த திரைப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஐசரி கே. கணேஷ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் ஐசரி கே. கணேசின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தில் இடம்பெறும் 'அப்டி அப்டி 'எனும் பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்த பாடலை பாடலாசிரியர் மாசூக் ரகுமான் எழுத, பின்னணி பாடகர் மைஸ்ஸா காரா மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோர் பாடியிருக்கிறார்கள். இதில் றாப் பகுதியை பாடகர் ஃப்ரீக் பாடி இருக்கிறார்.
மேலத்தேய தாள லயம்+ கர்நாடக இசை தாளம்+ றாப் வரிகள்+ வி எஃப் எக்ஸ்+ நடனம்+ கவர்ச்சிகரமான ஆடைகள் என இளைய தலைமுறையினர் விரும்பும் வகையில் இந்த பாடல் உருவாகி இருப்பதால்.. பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மூன்று மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்திருக்கிறது. இதன் காரணமாக படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பும் அதிகரித்திருக்கிறது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM