மியன்மாரில் புத்த மத விழாவில் பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல் ; 24 பேர் உயிரிழப்பு 

Published By: Digital Desk 3

08 Oct, 2025 | 12:38 PM
image

மத்திய மியன்மாரில் திருவிழா நிகழ்வொன்றில் ஆர்ப்பாட்டத்தின் போது பாராகிளைடர் மூலம் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 47 பேர் காயமடைந்துள்ளனர்.

தேசிய விடுமுறை நாளான திங்கட்கிழமை மாலை புத்த மத தாடிங்யுட் திருவிழா நிகழ்வில் பங்கேற்க  சாங் யூ நகரத்தில் சுமார் 100 பேர் கூடியிருந்தபோது, மோட்டார் மூலம் இயங்கும் பாராகிளைடர் ஒன்று கூட்டத்தின் மீது இரண்டு குண்டுகளை வீசியதாக இராணுவ ஆட்சிக்கு எதிரான மக்கள் பாதுகாப்புப் படையின் கீழ் உள்ள உள்ளூர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வு இராணுவ ஆட்சிக் கொள்கைகளை எதிர்த்து மெழுகுவர்த்தி ஏந்தி நடத்தப்பட்ட போராட்டமாகவும் அமைந்தது.

2021 ஆம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்பில் மியான்மர் இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து உள்நாட்டுப் போரில் ஈடுபட்டுள்ளது. இந்த மோதலில் 5,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐ.நா. மதிப்பிட்டுள்ளது.

திங்களன்று நடந்த கூட்டத்தின் போது, வான்வழித் தாக்குதல் நடத்தப்படலாம் என தகவல் தங்களுக்குக் கிடைத்ததாகவும், தங்கள் போராட்டத்தை விரைவாக முடிக்க முயன்றதாகவும் மக்கள் பாதுகாப்புப் படை அதிகாரி பிபிசி பர்மியரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் பாராமோட்டர்கள் எதிர்பார்த்ததை விட முன்னதாகவே சம்பவ இடத்தை அடைந்தன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங்...

2025-11-14 18:01:55
news-image

இந்தியா - கர்நாடகாவில் பெண் பணியாளர்களுக்கு...

2025-11-14 14:02:26
news-image

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு...

2025-11-13 17:56:17
news-image

“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா...

2025-11-13 16:09:16
news-image

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத...

2025-11-13 13:41:46
news-image

கானாவில் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - சன...

2025-11-13 16:05:49
news-image

சைப்ரஸில் நிலநடுக்கம் 

2025-11-12 17:26:28
news-image

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில்...

2025-11-12 16:09:57
news-image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை...

2025-11-12 16:06:26
news-image

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட...

2025-11-12 14:32:17
news-image

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் -...

2025-11-12 12:17:16
news-image

எகிப்தில் சுற்றுலா பஸ் மீது லொறி...

2025-11-12 11:43:56