யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் இருந்து தப்பியோடிய இளைஞன் ஒருவன் ரயிலில் மோதுண்டு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
நாவற்குழி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்வதற்கு நீண்ட நாட்களாக பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்த நிலையில் இளைஞன் தொடர்ந்து தலைமறைவாக இருந்துள்ளான்.
இந்நிலையில் கடந்த முதலாம் திகதி நாவற்குழி பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் பதுங்கி இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் இளைஞனை கைது செய்ய முற்பட்ட வேளை , இளைஞன் பொலிஸாரிடம் இருந்து தப்பித்து , ரயில் பாதையை கடந்து ஓட முற்பட்ட வேளை ரயிலில் மோதுண்டு மோதி படுகாயமடைந்துள்ளான்
படுகாயமடைந்த இளைஞனை பொலிஸார் யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் செவ்வாய்க்கிழமை (07) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM