சிங்­கப்­பூ­ரி­லி­ருந்து  கட்­டு­நா­யக்க விமான நிலையம் வந்­த­டைந்த  வர்த்­தகர் ஒருவர் வேன் ஒன்றில்  தனது வீடு நோக்கி பயணம் செய்து கொண்­டி­ருக்கும் போது அவ­ரி­ட­மி­ருந்து பணம், நகை மற்றும் பொருட்கள் ஆயுதம் தரித்த குழு­வொன்­றினால் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளது.

இச்­சம்­பவம்  புதன்­கி­ழமை அதி­காலை 5.20 மணி­ய­ளவில் நீர்­கொ­ழும்பு கொச்­சிக்­கடை பொலிஸ் பிரிவில் உள்ள  தளு­வ­கொட்­டுவை பிர­தே­சத்­தில் இடம்­பெற்­றுள்­ளது.

நீர்­கொ­ழும்பு கொச்­சிக்­கடை, லுர்து மாவத்­தையைச் சேர்ந்த தங்­க­ராஜா விக்­னராஜ் என்­ப­வ­ரி­டமே தளு­வ­கொட்­டுவை பிர­தே­சத்தில் வைத்து முகத்தை மூடி­ய­படி வேன் ஒன்றில் வந்த ஆறு பேர் கொண்ட  ஆயுதம் தரித்த குழு­வி­னரால் பணம், நகை மற்றும் வாகன உதிரிப்பாகங்கள் என்­பன கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. 

12 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யான நகைகள், 8 இலட்சம் ரூபா பெறு­ம­தி­யு­டைய வாகன உதிரிப் பாகங்கள் மற்றும் 48 ஆயிரம் ரூபா பணம், 18 ஆயிரம் ரூபா பெறு­ம­தி­யு­டைய இரண்டு கைய­டக்கத் தொலை­பே­சிகள் என்­பன கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன.