புங்­கு­டு­தீவு பாட­சாலை மாண­வி­யான சிவ­லோ­க­நாதன் வித்­தி­யா வின் கூட்­டுப்­பா­லியல் வல்­லு­றவு படு­கொலை வழக்கில் வழக்குத் தொடுநர் தரப்பில் முன்­வைக்­கப்­பட்ட சாட்­சி­யங்கள் நேற்று நிறை­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டன. இத­னை­ய­டுத்து எதி­ரிகள் தரப்பு சாட்சி விளக்­கத்­திற்கு மூன்று நீதி­ப­திகள் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்று ஏக­ம­ன­தாக உத்­த­ர­விட்­டுள்­ளது.   

குறித்த மாண­வியின் கூட்டு பாலியல் வல்­லு­றவு படு­கொலை வழக்­கா­னது யாழ்ப்­பாணம் மேல் நீதி­மன்றில் அமைக்­கப்­பட்­டுள்ள மூன்று தமிழ் மொழி பேசும் மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­க­ளான பாலேந்­திரன் சசி­ம­கேந்­திரன் தலை­மை­யி­லான அன்­ன­லிங்கம் பிரே­ம­சங்கர், மாணிக்­க­வா­சகர் இளஞ்­செ­ழியன் ஆகியோர் அடங்­கிய ட்ரயல் அட்பார் நீதி­மன்றில் தொடர் விசா­ர­ணை­யாக இடம்­பெற்று வரு­கின்­றது.  

நேற்று வியா­ழக்­கி­ழமை தொடர் வழக்கு விசா­ர­ணையின் பதி­னொ­ரா­வது நாளாக சாட்சிப் பதி­விற்­காக மன்று கூடி­யி­ருந்­தது. இதன்­போது நேற்­றைய தின சாட்­சிப்­ப­தி­வுகள் முடி­வ­டைந்த பின்னர் வழக்குத் தொடுநர் தரப்பில் இவ்­வ­ழக்­கினை நெறிப்­ப­டுத்தும் சட்­டமா அதிபர் திணைக்­கள பிரதி சொலி­சிட்டர் ஜெனரல் குமார்­ரட்ணம் மன்றில் விண்­ணப்பம் ஒன்றைச் செய்­தி­ருந்தார்.   

இதன்­படி இது­வரை இவ்­வ­ழக்­கிற்­காக வழக்குத் தொடு­நர்­த­ரப்­பா­கிய தம்மால் அழைக்­கப்­பட்டு நெறிப்­ப­டுத்­தப்­பட்ட சாட்­சி­யங்­க­ளு­டனும் இவ்­வ­ழக்­கிற்­காக சமர்ப்­பிக்­கப்­பட்ட சான்­றுப்­பொ­ருட்­க­ளான வ1,2,3,4,5,6,7,8,9,10,11,12,13,14(அ,ஆ,இ,ஈ,உ,),15,16,17,18,19,(அ,ஆ – 1,இ),20,21,22 (அ – 1,ஆ,இ,ஈ) 23,24,25,26,27 ஆகிய சான்­றுப்­பொ­ருட்­க­ளு­டனும் இவ்­வ­ழக்­கினை முடி­விற்கு கொண்­டு­வ­ரு­வ­தாக அறி­வித்தார்.   

இதனைத் தொடர்ந்து அவ­ரது விண்­ணப்­பத்தை ஏற்­றுக்­கொண்ட மன்­றா­னது இது­வரை முன்­வைக்­கப்­பட்ட சாட்­சிகள் மற்றும் சான்­றுப்­பொ­ருட்கள் ஊடான முகத்­தோற்­ற­ம­ளவில் எதி­ரி­க­ளுக்கு எதி­ராக எண்­பிக்­கப்­பட்­டுள்­ள­மையால் எதிரி தரப்பு விளக்­கத்­திற்கு மூன்று நீதி­ப­தி­களும் ஏக­ம­ன­தாக உத்­த­ர­வி­டு­வ­தாக மன்று அறி­வித்­தது.   

அதன் பின்னர் எதி­ரி­க­ளுக்கு அவர்கள் தரப்பு விளக்­க­ம­ளிப்­பது தொடர்­பாக விளங்­கப்­ப­டுத்­தப்­பட்­டது. அதா­வது, எதி­ரிகள் ஒவ்­வொ­ரு­வரும் தனித்­த­னி­யாக சாட்­சிக்­கூண்டில் நின்று சத்­தி­யப்­பி­ர­மாணம் அல்­லது உறுதி செய்து சாட்­சி­ய­ம­ளிக்க உரிமை உண்டு. அவ்­வாறு சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்து சாட்­சிக்­கூண்டில் நின்று சாட்­சியம் அளித்தால் அச்­சாட்­சியம் குறுக்கு விசா­ரணை செய்­யப்­பட்டு பதிவு செய்­யப்­படும்.   

அதே­போன்று எதி­ரிகள் ஒவ்­வொ­ரு­வரும் தனித்­த­னி­யாக எதி­ரிக்­கூண்டில் நின்று கூண்டு வாக்­கு­மூலம் வழங்­கு­வ­தாயின் அதற்கு சத்­தி­யப்­பி­ர­மாணம் அல்­லது உறு­திப்­பி­ர­மாணம் செய்யத் தேவை­யில்லை என்­ப­துடன் குறுக்கு விசா­ர­ணையும் செய்­யப்­பட மாட்­டாது. இச் சாட்­சி­யமும் சாட்­சி­ய­மாக பதிவு செய்­யப்­படும். அல்­லது எதி­ரிகள் மௌன­மாக இருக்­க­மு­டியும். அவ்­வாறு இல்­லா­து­விடின் எதி­ரிகள் தங்கள் சார்பில் சாட்­சி­யங்­களை அழைப்­ப­தற்கும் உரிமை உண்டு என எதி­ரிகள் தரப்பு விளக்கம் தொடர்­பாக மன்று விளங்­கப்­ப­டுத்­தி­யது.   

இதன்­பின்னர் எதி­ரிகள் தமது நிலைப்­பாடு தொடர்­பாக முடி­வெ­டுப்­ப­தற்­காக மன்­றினால் பத்து நிமி­டங்கள் கால அவ­காசம் வழங்­கப்­பட்­டது. இக் கால அவ­கா­சத்தின் பின்னர் எதி­ரிகள் தரப்பு சட்­டத்­த­ர­ணிகள் குற்­ற­வியல் நட­வ­டிக்கை முறை சட்­டக்­கோவை பிரிவு 1 இன் கீழ் எதி­ரிகள் சாட்­சி­ய­ம­ளிக்­க­வுள்­ள­தா­கவும் தங்கள் சார்பில் சாட்­சி­யங்­களை அழைத்து நெறிப்­ப­டுத்­த­வுள்­ள­தா­கவும் குறித்த நட­வ­டிக்­கைக்கு கால அவ­காசம் வழங்­கு­மாறும் மன்றை கோரி­னார்கள்.   

இந்த எதி­ரிகள் தரப்பு கோரிக்­கையை ஏற்ற மன்­றா­னது எதி­ரிகள் தரப்பு விளக்­கத்­திற்­காக இம் மாதம் 28 ஆம் 29 ஆம் 30 ஆம் ( 30 ஆம் திகதி மாத்­திரம் பிற்­பகல் 2 மணி வரை) செப்­ரெம்பர் மாதம் 4ஆம் 11 ஆம் 12 ஆம் 13 ஆம் 14 ஆம் 15 ஆம் ஆகிய திக­தி­களை தவ­ணை­யிட்டு உத்­த­ர­விட்­டி­ருந்­தது.   

மேலும் எதிரி தரப்பு சாட்சிப் பட்­டி­ய­லாக இணைக்­கப்­ப­ட­வுள்­ளமை தொடர்­பான விப­ரங்­களை 11.08.2017 ஆம் திக­திக்கு முன்னர் வழக்குத் தொடுநர் தரப்பிற்கு அறிவிக்கப்பட்டு அவை இணைத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் வழக்கில் திருத்தங்கள் செய்யவேண்டி இருப்பின் அவை 28.08.2017 அன்று எதிரி தரப்பு விளக்கம் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவை மேற்கொள்ளப்படவேண்டும் எனவும் மன்று உத்தரவிட்டது.   

அத்துடன் அடுத்த வழங்குத்தவணையான 28.08.2017 அன்று வரை எதிரிகள் 9 பேரையும் விளக்கமறியலில் வைக்க மூன்று நீதிபதிகள் அடங்கிய ட்ரயல் அட்பார் ர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.