மக்கள் வங்கியின் ‘People’s Tower’ என்ற புதிய பிரதான அலுவலகக் கட்டிடம், இலக்கம் 374, டாக்டர் கொல்வின் ஆர். டி சில்வா மாவத்தை, கொழும்பு 02 என்ற முகவரியில், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி. நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் திறைசேரியின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும ஆகியோரின் தலைமையில், 2025 ஒக்டோபர் 7 அன்று திறந்து வைக்கப்பட்டது.
ஆறுபத்து நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பொது மக்களுக்கு நிதி வசதிகளை வழங்குவதன் மூலமும், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார மீட்சியில் ஈடு இணையற்ற பங்களிப்பை வழங்குவதன் மூலமும் நாட்டின் முன்னேற்றத்திற்கு அர்ப்பணிப்புடன் பங்களித்து வந்துள்ள மக்கள் வங்கி, இந்த புதிய தலைமையலுவலக கட்டிடத்தைத் திறப்பதன் மூலம் இந்த நாட்டின் வங்கி மற்றும் நிதி வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனை இலக்கினை நிலைநாட்டியுள்ளது. இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வங்கியின் பங்களிப்பை பிரதிபலிப்பது மட்டுமல்லாமல், மக்கள் வங்கி நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் வழங்கும் சேவைகளையும் மேம்படுத்தும்.
இந்தப் புதிய தலைமையகக் கட்டிடம் 22 தளங்களையும் 3 நிலத்தடி தளங்களையும் கொண்டுள்ளதுடன், மேலும் இது மக்கள் வங்கியின் சுற்றுச்சூழல் நிலைபேற்றியல் கொள்கையைப் பின்பற்றி, பசுமைக் கட்டிடக் கருத்தியலுக்கு ஏற்ப முழுமையாகக் கட்டப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். கூடுதலாக, இந்தக் கட்டிடத்தில் முழுமையான வசதிகளைக் கொண்ட கேட்போர்கூடம், ஆவணப் பிரிவு, நவீன சிற்றுண்டிச்சாலை, மாநாட்டு அரங்குகள் மற்றும் பல்வேறு சிறப்பு வசதிகள் உள்ளன.
இங்கு, மக்கள் வங்கியின் பிராந்திய பயிற்சி கல்லூரியும் நிறுவப்பட்டுள்ளதுடன், மேலும் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன டிஜிட்டல் வங்கி வசதிகளை வழங்கும் நோக்கில் மக்கள் வங்கியின் யூனியன் பிளேஸ் கிளை இங்கு அமைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 02, சேர் சிற்றம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள மக்கள் வங்கியின் பழைய தலைமையகக் கட்டிடம் 1977 இல் நிறுவப்பட்டது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, புதிதாக நிறுவப்பட்ட இந்த தலைமையகம், ஒரு அரச வங்கி மற்றும் ஒரு தேசிய நிறுவனமாக மக்கள் வங்கியின் ஸ்திரத்தன்மை, புத்தாக்கம், செயல்திறன் மற்றும் பெருமையை பிரதிபலிக்கிறது.
இந்த திறப்பு விழாவில், மக்கள் வங்கியின் தலைவர் பேராசிரியர் நாரத பெர்ணான்டோ உள்ளிட்ட பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், பிரதம நிறைவேற்று அதிகாரிஃபொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா, வங்கியின் உயர் அதிகாரிகள், அழைக்கப்பட்ட விருந்தினர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மக்கள் வங்கி ஜூலை 1, 1961 இல் நிறுவப்பட்டதுடன், மேலும் தற்போது இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமாக உள்ளது, இதன் சொத்து மதிப்பு ரூபா 3.5 டிரில்லியனும் அதிகமாகும். நாடு முழுவதும் மக்கள் வங்கி கிளைகளின் எண்ணிக்கை 750 ஐ தாண்டியுள்ளது, மேலும் இது 7,300 க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்டுள்ளது. மொத்த வாடிக்கையாளர் தளம் 15.2 மில்லியனைத் தாண்டியுள்ளது, இது நாட்டில் ஒரு வணிக வங்கியுடன் தொடர்புடைய மிகப்பெரிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையாகக் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மக்கள் வங்கி நாட்டில் டிஜிட்டல் வங்கியில் முன்னோடியாக உள்ளது, தற்போது அதன் டிஜிட்டல் பரிவர்த்தனை பயனர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனைத் தாண்டியுள்ளது. ஒரு பொறுப்பான அரச வங்கியாக, மக்கள் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நிதி வசதிகளை வழங்குவதன் மூலம் மட்டுமல்லாமல், நாட்டின் சமூக மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பங்களிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றியுள்ளது. மேலும், ஒரு அரச வங்கியாக, ஏற்றுமதி, கல்வி, சுகாதாரம், அதிவேக நெடுஞ்சாலைகள், வீதிகள், சுற்றுலா மற்றும் உட்கட்டமைப்பு போன்ற துறைகளுக்கு நிதி ஆதரவை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மக்கள் வங்கி கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM