வரலாற்றில் முதல் முறையாக ஒரு அவுன்ஸ்  தங்கத்தின் விலை 4,000 டொலர்களை கடந்தது 

Published By: Digital Desk 3

08 Oct, 2025 | 10:32 AM
image

வரலாற்றில் முதல் முறையாக புதன்கிழமை (08) ஒரு அவுன்ஸ்  தங்கத்தின் விலை 4,000 அமெரிக்க டொலர்களை கடந்துள்ளது.

அமெரிக்க மத்திய வங்கி (Federal Reserve) மேலும் வட்டி விகிதக் குறைப்புகளை மேற்கொள்ளும் என்ற எதிர்பார்ப்புகளுடன், அதிகரித்து வரும் பொருளாதார மற்றும் அரசியல் அசாதாரண நிலைமைகளில் இருந்து பாதுகாப்பு தேடும் முதலீட்டாளர்களின் நடவடிக்கைகள் இதற்கு காரணமாக இருந்தன.

0300 GMT நிலவரப்படி தங்கம் அவுன்ஸ் ஒன்றுக்கு 0.7% அதிகரித்து 4,011.18 அமெரிக்க டொலர்களாக இருந்தது. டிசம்பர் அமெரிக்க தங்க எதிர்கால ஒப்பந்தங்கள் 0.7% அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு 4,033.40 அமெரிக்க டொலர்களாக இருந்தது.

பாரம்பரியமாக, தங்கம் அசாதாரண மற்றும் நிலையற்ற காலங்களில் மதிப்பை காக்கும் ஒரு சொத்தாகக் கருதப்படுகிறது.

2024 ஆம் ஆண்டில் 27% அதிகரித்த பின்னர்,  தங்க விலை இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 53% அதிகரித்துள்ளது.

“தற்போது இந்த வர்த்தகத்தில் மிகப் பெரிய நம்பிக்கை நிலவுகிறது,  குறிப்பாக மத்திய வங்கி (Fed) தொடர்ந்து வட்டி விகிதங்களை குறைக்கும் வாய்ப்பு உள்ளதால், சந்தை அடுத்த பெரிய இலக்கான 5,000 அமெரிக்க டொலர்களை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது,” என சுயாதீன உலோக வர்த்தகர் டை வொங் (Tai Wong) தெரிவித்துள்ளார்.

“மத்திய கிழக்கு அல்லது உக்ரைனில் நீடித்த அமைதி ஒப்பந்தம் போன்ற சில இடையூறுகள் இருக்கலாம், ஆனால் இந்த வர்த்தகத்தின் அடிப்படை காரணிகள்,பெரும் மற்றும் வளர்ந்து வரும் கடன், கையிருப்பு (reserve) பன்முகப்படுத்தல், மற்றும் பலவீனமான டொலர் — நடுத்தர காலத்தில் மாறுவது சாத்தியமில்லை,” என அவர் தெரிவித்துள்ளார்.

தங்கத்தின் விலை உயர்வை பல காரணிகள் ஒன்றிணைந்து தூண்டியுள்ளன. இதில் வட்டி விகிதக் குறைப்பு எதிர்பார்ப்புகள், அரசியல் மற்றும் பொருளாதார அசாதாரண நிலை, மத்திய வங்கிகளின் வலுவான தங்கக் கொள்முதல், தங்க ETF களில் முதலீட்டு வரவு, மற்றும் பலவீனமான அமெரிக்க டொலர் ஆகியவை அடங்கும்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான யோங்கிங்...

2025-11-14 18:01:55
news-image

இந்தியா - கர்நாடகாவில் பெண் பணியாளர்களுக்கு...

2025-11-14 14:02:26
news-image

அமெரிக்காவில் 43 நாள் நீடித்த அரசு...

2025-11-13 17:56:17
news-image

“உங்களுக்கு எத்தனை மனைவிகள்?” - சிரியா...

2025-11-13 16:09:16
news-image

டெல்லியில் நடந்தது ஒரு தெளிவான பயங்கரவாத...

2025-11-13 13:41:46
news-image

கானாவில் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு - சன...

2025-11-13 16:05:49
news-image

சைப்ரஸில் நிலநடுக்கம் 

2025-11-12 17:26:28
news-image

அமெரிக்காவில் சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில்...

2025-11-12 16:09:57
news-image

அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்களை...

2025-11-12 16:06:26
news-image

தென்சீனாவில் சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்ட...

2025-11-12 14:32:17
news-image

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் -...

2025-11-12 12:17:16
news-image

எகிப்தில் சுற்றுலா பஸ் மீது லொறி...

2025-11-12 11:43:56