வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராகக் கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் ஆதரவளிக்கவுள்ளனர். அவர்கள் அது தொடர்பில் எம்மிடம் தனிப்பட்ட முறையில் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்தானந்த அழுத்கமகே தெரிவித்தார்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை கூட்டு எதிர்க்கட்சி நேற்று பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகத்திடம் நேற்று கையளித்துள்ளது. பிரேரணையை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை வெற்றியளிக்கும் என நம்புகிறோம். எனவே அமைச்சர் ரவி கருணாநாயக்க நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்புக்கு செல்ல முன்னர் கெளரவமான முறையில் இராஜினாமா செய்ய வேண்டும். அல்லாதுபோனால் நம்பிக்கையில்லாப் பிரேரணையூடாக அவர் பதவி விலக வேண்டிவரும்.
அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சி ஏற்கனவே இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது. அப்போது அது தொடர்பில் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும் தற்போது ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணையின் பின்னர் மத்திய வங்கி பிணை முறியில் இடம்பெற்றுள்ள மோசடி தொடர்பில் அனைவரும் புரிந்துகொண்டுள்ளனர்.
எனவே கையளிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் 97 பேரும் ஆதரவளிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறோம். மேலும் அவருக்கு எதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு மக்கள் விடுதலை முன்னணி ஆதரவளிக்கவுள்ளதாக ஏற்கனவே தெரிவித்துள்ளது. அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகிக்கும் அதிகளவான அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தனிப்பட்ட முறையில் எம்மிடம் தெரிவித்துள்ளனர் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM