இரட்டை கொலை ; சந்தேகநபர்கள் நால்வர் கைது !

08 Oct, 2025 | 09:23 AM
image

அம்பாந்தோட்டை, ஹுங்கம பொலிஸ் பிரிவு, வாடிகல, ரன்ன பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (07)  ஒரு ஆணும் பெண்ணும் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய  மூன்று சந்தேக நபர்களையும், கொலைக்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் ஒரு பெண் சந்தேக நபரையும் கைது செய்துள்ளனர்.

ஹுங்கம பொலிஸார் மற்றும் தங்காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, பொலிஸாருக்கு  கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ரன்ன பகுதியைச் சேர்ந்த 27 மற்றும் 33 வயதுடையவர்கள் எனவும்  பெண் சந்தேக நபர் 35 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த குற்றத்தில் தொடர்புடைய மற்ற சந்தேக நபர்களைக் கைது செய்ய மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

மேலும் குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட 12 ரக  உள்நாட்டுத் துப்பாக்கி, 02 கத்திகள், 12 ரக வெடிமருந்துகள் மற்றும் 12 ரக  வெற்று வெடிமருந்துகள் என்பவற்றை  பொலிஸார்  கைப்பற்றியுள்ளனர்.

மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2016 பின் அரச சேவையில் இணைந்த...

2026-03-10 18:45:19
news-image

அரசாங்கத்தின் முறையற்ற திட்டமிடலால் மக்கள் மீது...

2026-03-10 18:03:54
news-image

அரசாங்கம் எரிபொருள் விலை அதிகரிப்பின் ஊடாக...

2026-03-10 17:50:29
news-image

சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான...

2026-03-10 17:53:16
news-image

விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா...

2026-03-10 17:16:54
news-image

ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியை சந்தித்தார் சுவிட்சர்லாந்து...

2026-03-10 17:20:08
news-image

இலங்கையின் தோட்டச் சமூகத்தைப் பாதுகாப்பதில் 100...

2026-03-10 16:57:59
news-image

ஈரான் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதல்:...

2026-03-10 17:26:38
news-image

ஒருங்கிணைந்த திட்டமொன்றின் ஊடாக மணல் மாபியாக்களை...

2026-03-10 16:45:54
news-image

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்பு தொடர்பான பாராளுமன்ற...

2026-03-10 16:12:56
news-image

மணல் மாபியாக்களின் செயற்பாடுகளால் மணல் விலை...

2026-03-10 16:53:06
news-image

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதி...

2026-03-10 15:18:26