வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க தொடர்பில் தேசிய அரசாங்கத்தில் இருந்துகொண்டு கருத்து தெரிவிக்க முடியாது. எமது கட்சியின் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து நாம் விவாதிக்க முடியும். எதிர்வீட்டு பிரச்சினையில் நாம் எவ்வாறு தலையிடுவது என அமைச்சர் பைசர் முஸ்தபா கேள்வி எழுப்பினார்.
இந்த அரசாங்கத்தில் மாத்திரமல்ல சகல அரசாங்கத்திலும் திருடர்கள் இருந்தனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பு நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
மத்திய வங்கி பிணைமுறிகள் குறித்த ஊழல் விடயத்தில் உரிய நபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆகவே இந்த விடயத்தில் நாம் எவர் தொடர்பிலும் கருத்து தெரிவிக்க முடியாது. அமைச்சர் ரவி கருணாநாயக்க தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற நிலையில் அவர் குறித்து எம்மால் எந்தக் கருத்தையும் முன்வைக்க முடியாது.
எமது கட்சிக்குள் ஏதேனும் குற்றங்கள் இடம்பெற்றுள்ளன என்ற முறைப்பாடுகள் கிடைத்தாலோ அல்லது ஊழல் குற்றத்தில் எமது கட்சி உறுப்பினர்கள் எவரும் சிக்கிக்கொண்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டாலோ அது தொடர்பில் கருத்து தெரிவிக்க எமக்கு உரிமை உள்ளது. ஆனால் ஐக்கிய தேசியக் கட்சியின் விடயங்களை அவர்கள் கையாள வேண்டும். இதில் எமது கருத்துக்கள் அர்த்தமற்றவை. எமது வீட்டில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து நாம் தலையிட முடியும். எதிர்வீட்டு பிரச்சினைக்கு நாம் எவ்வாறு தலையிடுவது?
அதேபோல் திருடர்கள் , ஊழல் வாதிகள் இந்த அரசாங்கத்தில் மாத்திரம் அல்ல சகல அரசாங்கத்திலும் உள்ளனர். முன்னைய ஆட்சிகளின் போதும் திருடர்கள் ஊழல் வாதிகள் நிறைந்து இருந்தனர். இவர்கள் சர்வாதிகாரமாக செயற்பட்டு ஊழல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். ஆகவே அரசாங்கத்தில் திருடர்கள் உள்ளனர் என்பது வழமையான விடயமாகும். ஆனால் இந்த அரசாங்கத்தில் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை சுயாதீனமாக முன்னெடுக்கபட்டு வருகின்றனது. குற்றம் நிருபிக்கப்பட்ட யாராக இருந்தாலும் அவர்களுக்காக சிறைச்சாலைகள் காத்துக்கொண்டுள்ளன. யாராக இருந்தாலும் சட்டத்தின் மூலமாக இவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM