( எம்.ஆர்.எம்.வசீம் ,இராஜதுரை ஹஷான்)
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது இலங்கை கிரிக்கெட் சபையின் மோசடி தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கிரிக்கெட் சபையை ஒரு குறுகிய தரப்பினர் ஆக்கிரமித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அன்று முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை ஜனாதிபதி தற்போது மேற்கொண்டுள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
உலக நடப்புகளுக்கு அமைய பழமையான சட்டங்களை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். ஆகவே விளையாட்டில் ஊக்கு பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயம் (திருத்தச்) சட்டமூலத்தை வரவேற்கிறோம்.
அரசாங்கம் கடந்த அமர்வின் போது தண்டனைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலத்தை கொண்டு கொண்டு வந்தது.இந்த சட்டமூலத்தின் பாரதூரத்தை நாங்கள் எடுத்துரைத்தோம்.இந்த சட்டமூலம் சட்டமாக்கப்பட்டால் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பொறுப்பானவர்கள் சிறைச்செல்ல நேரிடும்.
அண்மையில் மொனராகலை பகுதியில் ஆசிரியர் ஒருவரை மாணவர்கள் தாக்கியுள்ளார்கள்.அந்த ஆசிரியர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார்.தற்போதைய சூழல்களுக்கு மத்தியில் தனக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும் என்பதால் தான் முறைப்பாடளித்தாக அந்த ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.இந்த சட்டம் இயற்றப்படுவதற்கு முன்னரே பாடசாலை கல்வி கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
இவ்வாறான பின்னணியில் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை இலக்காகக் கொண்டு அரசாங்கம் பிறிதொரு சட்டமூலத்தை கொண்டு வர முயற்சிக்கிறது.சட்டமியற்றல் தொடர்பில் அரசாங்கத்துக்கு போதுமான புரிதல் உள்ளதா என்பதில் பாரிய சந்தேகம் காணப்படுகிறது.தண்டனை சட்டக்கோவை திருத்தச் சட்டமூலம் தொடர்பில் அரசாங்கம் உறுதியான நிலைப்பாட்டை அ றிவிக்க வேண்டும்.
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க எதிர்க்கட்சியில் இருக்கும் போது இலங்கை கிரிக்கெட் சபையின் மோசடி தொடர்பில் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். கிரிக்கெட் சபையை ஒரு குறுகிய தரப்பினர் ஆக்கிரமித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.அன்று முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் என்ன நடவடிக்கைகளை ஜனாதிபதி தற்போது மேற்கொண்டுள்ளார்.
இலங்கை கிரிக்கெட் சபையை மறுசீரமைப்பதற்கும் நோக்கில் கே.டி. சித்ரசிறி தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டது, அந்த குழு அறிக்கை சமர்ப்பித்துள்ளது.அறிக்கையில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM