தீர்வுக்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் சர்வதேச அழுத்தங்கள் படிப்படியாகக் குறையும் - இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டு

Published By: Vishnu

07 Oct, 2025 | 07:29 PM
image

(நா.தனுஜா)

மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேச சமூகம் உணரக்கூடியவகையிலும், அவர்கள் திருப்தியடையக்கூடிய  அவசியமான நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டால், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்படல் வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக் குறைவடையும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த 8 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரின்போது நிறைவேற்றும் நோக்கில் பிரிட்டன் தலைமையில் கனடா, மாலாவி, மொன்டெனீக்ரோ மற்றும் வட மெசிடோனியா உள்ளிட்ட இணையனுசரணை நாடுகளால் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' எனும் தலைப்பில் தயாரிக்கப்பட்ட புதிய பிரேரணை, திங்கட்கிழமை (6) பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

இதுகுறித்து ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே நிமல் புஞ்சிஹேவா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நிலவும் மனித உரிமைகள் சார்ந்த கரிசனைகளுக்குத் தீர்வுகாணுமாறு கடந்த காலங்களில் பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்ததாகவும், அதனை முன்னிறுத்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அவர், அத்தீர்மானங்களுடன் ஒப்பிடுகையில் இம்முறை நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் மிகப்பாரதூரமானது அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேபோன்று இப்புதிய தீர்மானத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்துக்குத் தீர்வுகாணல், காணி விடுவிப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் உள்வாங்கப்பட்டிருப்பதாக விளக்கமளித்துள்ள அவர், இவ்விவகாரங்கள் குறித்துத் தீர்வு காண்பதற்காக கடந்த காலங்களில் பல்வேறு ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்டிருப்பினும், அவற்றின் ஊடாக வழங்கப்பட்ட பரிந்துரைகள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று கரிசனை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் சர்வதேச சமூகம் உணரக்கூடியவகையிலும், அவர்கள் திருப்தியடையக்கூடிய முறையிலும் அப்பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு, அவசியமான நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டால், இந்த வெளியக அழுத்தங்கள் படிப்படியாகக் குறைவடையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செம்மணி புதைகுழி விவகாரம்: சர்வதேச தளங்களில்...

2026-07-22 19:28:24
news-image

அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டேன்; மக்களுக்காக தொடர்ந்து குரல்...

2026-07-22 19:22:06
news-image

ஜெஃப்ரி பாவா - மூனமல் விருது...

2026-07-22 19:13:47
news-image

இலங்கை உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தை...

2026-07-22 19:16:23
news-image

செம்மணி புதைகுழி அகழ்வு: 40ஆவது நாளில்...

2026-07-22 19:09:26
news-image

2 கோடி ரூபா பணத்துடன் இரு...

2026-07-22 18:45:15
news-image

2023 முதல் 2026 மார்ச் வரை...

2026-07-22 18:39:34
news-image

அநுராதபுரத்தில் புதையல் தோண்டிய 4 பேர்...

2026-07-22 18:00:52
news-image

பாராளுமன்றில் வாய்மூல விடைக்கான 50 வினாக்கள்...

2026-07-22 17:36:01
news-image

விடைபெறுகிறார் சீனத்தூதுவர்

2026-07-22 17:35:45
news-image

முல்லைத்தீவில் சுற்றுலா அலுவலகத்தை நிறுவுவதுடன், பிரத்தியேக...

2026-07-22 17:11:45
news-image

சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி அபிவிருத்தி குறித்து...

2026-07-22 17:11:08