எழுத்தாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளர் சித்திக் காரியப்பரின் துணைவியுமான பாத்திமா நளீரா எழுதிய “ஏழாம் வானத்தின் சிறகுகள்” கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு எதிர்வரும் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணிக்கு கொழும்பு தபால் திணைக்கள கேட்போர் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
மூத்த ஊடகவியலாளர் வீரகத்தி தனபாலசிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் கொழும்பு உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன் கௌரவ அதிதிகளாக பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கைா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பர் ஆகியோர் வருகைதரவுள்ளனர்.
இந்த நிகழ்வின்போது நூலின் முதல் பிரதியை ஜேஜே அறக்கட்டளையின் நிறுவன பணிப்பாளர் கலாநிதி I.Y.M. ஹனீப் பெற்றுக்கொள்ளவுள்ளார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM