வீடு கட்ட நிதி வசதி இல்லாத குறைந்த வருமானம் குடும்பங்களுக்கான புதிய அரசாங்க கொள்கையின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் “சொந்தமாக ஒரு இடம் - ஒரு அழகான வாழ்க்கை” திட்டத்தின் கீழ், களுத்துறை மாவட்டத்தின் மில்லனிய, பண்டாரகம மற்றும் ஹொரண பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் ஐந்து குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக அரசாங்க உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளை கையளிக்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை (6) பிற்பகல் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
மில்லனிய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வெனிவெல்பிட்டிய மற்றும் பண்டாரகம பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள யட்டியான மற்றும் சேனபுர கிராமங்களில் வசிக்கும் மூன்று குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட வீடுகளின் சாவிகளை அமைச்சர் வழங்கினார்.
ஹொரண பிரதேச செயலகப் பிரிவின் கும்புக, கிழக்கு மற்றும் கோனபொல கிராமங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காக கட்டப்பட்ட இரண்டு வீடுகளின் சாவிகளை அமைச்சர் வழங்கினார்.
ஒவ்வொரு வீட்டையும் கட்டுவதற்கு அரசாங்கம் 1 மில்லியன் ரூபாய் உதவித் தொகையை வழங்க நடவடிக்கை எடுத்திருந்தது.
களுத்துறை மாவட்டத்தில் வீடு கட்ட நிதி வசதி இல்லாத தேர்ந்தெடுக்கப்பட்ட 155 ஏழைக் குடும்பங்களுக்கு அரசாங்கம் இதுவரை 155 மில்லியன் ரூபாய் தொகையை வழங்கியிருந்தது. இந்த திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட ஐந்து வீடுகளை இன்று ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
2025 ஆம் ஆண்டு உலக வாழ்விட தினத்துடன் இணைந்து, களுத்துறை மாவட்டத்தில் மேலும் 40 வீடுகளை நிர்மாணிப்பதற்காக 40 பயனாளிகளுக்கு ரூ. 40 மில்லியன் வழங்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது, அதன்படி, களுத்துறை மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 195 வீடுகள் கட்டுமானத்தின் இறுதி கட்டத்தில் உள்ளன.
மேற்கண்ட உதவித் திட்டத்திற்கு கூடுதலாக, "சேவா அபிமானி கடன் திட்டத்தின்" கீழ் வீடற்ற அரசு ஊழியர்களுக்கான வீடுகளை நிர்மாணிப்பதற்காக 43 பயனாளிகளுக்கு தலா ரூ. 1.5 மில்லியன் வீதம் ரூ. 645 லட்சம் வழங்கியுள்ளது.
ஊனமுற்றோர் மற்றும் ஆதரவற்ற குடும்பங்களுக்கு வீட்டு உதவி வழங்குவதற்காக "சேவா ஆதார் திட்டத்தின்" கீழ் இது ஒரு துரிதப்படுத்தப்பட்ட திட்டமாகும்.
இந்த இந்நிகழ்வில் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், விசேட வைத்திய நிபுணர் டாக்டர் நிஹால் அபேசிங்க, ஒஷானி உமங்க, மில்லனிய பிரதேச சபையின் தலைவர் சமன் ஜயதுங்க, பண்டாரகம பிரதேச சபையின் தலைவர் சமித் ஜயகே, ஹொரண பிரதேச சபையின் தலைவர் நிர்மலா சில்வா, ஹொரண பிரதேச சபையின் உப தலைவர் பியசேன அமரகோன், பண்டாரகம பிரதேச செயலாளர் டீனா ஜயசிங்க. தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் களுத்துறை மாவட்ட முகாமையாளர் அஜித் குமாரபெரும, உள்ளுர் அரசியல் தலைவர்கள், அரச அதிகாரிகள், கிராம மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM