பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிப்பு

Published By: Digital Desk 3

07 Oct, 2025 | 05:27 PM
image

அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மிச்செல் எச்.தேவோரெத் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு பௌதீகவியலுக்கான நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.

2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோர் விவரங்கள் திங்கட்கிழமை முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. முதல் நாளான நேற்று மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு பகிர்ந்தளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  புற நோயெதிர்ப்பு சகிப்புத்தன்மை தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக மேரி இ. பிரன்கோவ், பிரெட் ராம்ஸ்டெல் மற்றும் ஷிமோன் சகாகுச்சி ஆகியோருக்கு 2025-ம் ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, 2025-ம் ஆண்டுக்கான பௌதீகவியலுக்கான நோபல் பரிசு 3 பேருக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. அமெரிக்காவை சேர்ந்த ஜான் கிளார்க், மிச்செல் எச்.தேவோரெத் மற்றும் ஜான் எம். மார்டினிஸ் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது. மின்சார சுற்றுகள் (சர்கியூட்) ஒன்றில் மேக்ரோஸ்கோபிக் குவாண்டம் இயந்திர சுரங்கப்பாதை மற்றும் ஆற்றல் அளவீடு ஆகியவற்றை கண்டறிந்ததற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு பதற்றம்: உலக சந்தையில்...

2026-07-14 07:20:14
news-image

தண்ணீர் என நினைத்து கழிவறை சுத்திகரிப்பு...

2026-07-13 16:16:01
news-image

ஜுராசிக் பார்க் திரைப்படத் தொடரின் நடிகர்...

2026-07-13 14:15:05
news-image

அமெரிக்கா - ஈரான் போர் நடவடிக்கைகளினால்...

2026-07-13 11:56:10
news-image

பங்களாதேஷில் கடும் மழை : வெள்ளப்...

2026-07-13 10:51:37
news-image

வெனிசுவேலாவை உலுக்கிய இரட்டை பூமியதிர்ச்சி: பலி...

2026-07-13 10:59:16
news-image

ஐரோப்பாவில் வெப்ப அலையினால் ஜூன் மாத...

2026-07-13 09:44:43
news-image

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் உள்ள பிரபல...

2026-07-13 06:25:54
news-image

அமெரிக்க - ஈரான் மோதல் தீவிரம்:...

2026-07-13 06:23:14
news-image

கத்தாரில் வான்வெளியில் ஏவுகணை இடைமறிப்பு: சிதறிய...

2026-07-12 17:23:53
news-image

ஓமான் கடற்கரையில் கப்பல் மீது தாக்குதல்:...

2026-07-13 12:29:24
news-image

ஈரான் ஏவிய ஏவுகணைகள், ட்ரோன்களை இடைமறித்தது...

2026-07-12 14:43:09