சிகை அலங்கரிப்பாளர்களும் தொழில்வாண்மை மிகுந்தவர்களாக மாறவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

07 Oct, 2025 | 05:08 PM
image

எமது மாகாணத்திலுள்ள சிகை அலங்கரிப்பாளர்களும் தொழில்வாண்மை மிகுந்தவர்களாக தற்போதைய யுகத்துக்கு ஏற்றவர்களாக மாறவேண்டும். தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை (NAITA) அதனைச் செய்வதற்குத் தயாராக இருக்கின்றது. அதனைப் பயன்படுத்தி தேசிய தொழில்முறை தகுதிச் சான்றிதழை (NVQ) எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சிகை ஒப்பனையாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பொதுக்கூட்டம் தந்தைசெல்வா அரங்கில்  செவ்வாய்க்கிழமை  (07) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

நான் ஆளுநராகப் பதவியேற்ற பின்னர் இரண்டு தடவைகள் உங்கள் சங்கத்தினர் என்னை வந்து சந்தித்திருந்தார்கள். சங்க அங்கத்தவர்களிடையே கட்டுப்பாடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார்கள்.

குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி அலங்காரம் தொடர்பில் இறுக்கமான – ஒழுக்கமான நடைமுறை தேவை என அவர்கள் வலியுறுத்தியிருந்தார்கள்.

ஒழுங்குமுறைகள் - கட்டுப்பாடுகளை பலர் விரும்புவதில்லை. ஆனால் உங்கள் சங்கம் அதனைத் தேடி வந்து நடைமுறைப்படுத்துமாறு கோரியது பாராட்டுக்குரியது. அதேபோல உங்கள் சங்கம் மற்றும் சமாசம் எடுக்கின்ற தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உறுப்பினர்கள் ஒத்துழைக்கவேண்டும். 

உள்ளூராட்சி மன்றங்கள் சில நிபந்தனைகளுடனேயே உங்களின் தொழில் நிலையங்களுக்கான அனுமதிகளை வழங்குகின்றன. அவை உங்களால் மீறப்படுகின்றபோது தொழில் நிலையங்களை மூடுவதற்கு உள்ளூராட்சி மன்றங்களுக்கு அதிகாரங்கள் உள்ளன. எனவே ஒழுங்குமுறைக்கு உட்பட்டு செயலாற்ற வேண்டும். 

உங்கள் எல்லோருக்கும் சமூகப்பொறுப்பு இருக்கவேண்டும். எமது சமூகம் தொடர்பான கரிசனையுடன் பணியாற்றவேண்டும். நீங்கள் சங்கமாக – சமாசமாக ஒற்றுமையுடன் இருக்கும்போதுதான் எளிதில் சாதிக்க முடியும். எதிர்காலத்தில் சிறப்பான தொழில்வாண்மையுள்ளவர்களாக நீங்கள் மிளிர்வதற்கு வாழ்த்துகின்றேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை :...

2026-07-13 12:26:34
news-image

நாட்டின் இருவேறு பகுதிகளில் போதைப்பொருட்களுடன் சந்தேகநபர்கள்...

2026-07-13 12:22:38
news-image

காலி முகத்திடலில் சட்டவிரோத சிகரெட்டுகளுடன் சீன...

2026-07-13 12:22:28
news-image

இம்மாதத்தின் முதல் 12 நாட்களில் நாட்டில்...

2026-07-13 11:48:46
news-image

இலங்கை - உஸ்பெகிஸ்தான் இடையே புதிய...

2026-07-13 11:36:24
news-image

யக்கல பகுதியில் 5,000 லீற்றருக்கும் அதிக...

2026-07-13 12:22:14
news-image

உலகில் அதிக போக்குவரத்து நெரிசல் மிக்க...

2026-07-13 11:20:46
news-image

மட்டக்களப்பு தளவாய் வீட்டுத்திட்ட வீதியை புனரமைக்குமாறு...

2026-07-13 11:00:38
news-image

பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ;...

2026-07-13 11:13:39
news-image

இலங்கையின் அதிக வயதான பெண்களில் ஒருவரான...

2026-07-13 10:20:18
news-image

வேளாண்மைத் துறையை ஜனாதிபதி பொறுப்பேற்க வேண்டும்...

2026-07-13 09:54:26
news-image

களுத்துறை மாவட்ட செயலகத்தில் திடீர் தீ...

2026-07-13 09:56:19