யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் முறைப்பாடு ஒன்று தொடர்பில் விசாரணை செய்யச் சென்ற போது, இரு பொலிஸார் மீது நந்தாவில் அம்மன் கோவில் அருகில் வைத்து வாள் வெட்டுத் தாக்குதல் நடத்திய குழுவின் முக்கிய உறுப்பினர்கள் எனக் கருதப்படும் நல்லூர் முத்து உள்ளிட்ட இருவரை நேற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஏற்கனவே மது உள்ளிட்ட இருவரைக் கைது செய்து 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைத்துள்ள நிலையிலேயே நேற்று யாழ். பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான சிறப்புக் குழு இவ்விரு சந்தேக நபர்களையும் கைது செய்தது.
பொலிஸார் மீதான தாக்குதல் குறித்து கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது நான்காக உயர்ந்துள்ளதும. புதிதாக கைதான இருவரும் 18 வயது நிரம்பியவர்கள் என குறிப்பிட்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர, அவர்களிடம் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், தாக்குதலுக்கு பயன்படுத்திய வாள்கள், மோட்டார் சைக்கிள்களை கைப்பற்ற சிறப்பு விசாரணைகள் நடைபெறுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே இந்த வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினரும் ஆவா பாதாள உலகக் குழு உறுப்பினருமான விக்டரை கைது செய்ய சிறப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. வட மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொஷான் பெர்ணான்டோவின் நேரடி கட்டுப்பாட்டில் யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் பாலித்த பெர்ணான்டோவின் ஆலோசனைக்கு அமைய யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஹேவாவித்தான தலைமையில் 6 பொலிஸ் குழுக்களே இந்த விசாரணைகளை முன்னெடுத்துள்ளன.
கடந்த ஜூலை 30 ஆம் திகதி கொக்குவில் பகுதியில் முறைப்பாட்டு விசாரணைக்கு சென்ற தம்மிக, சுரேஷ் ஆகிய இரு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் வாள்வெட்டுக்கு உள்ளாகி இருந்தனர்.
முதலில் நல்லூர் சத்தியானந்தன வீதியைச் சேர்ந்த 20 வயதுடைய மதூ எனப்படும் சிவராஷா மதுஷன் மற்றும் 23 வயதுடைய மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த விஜயரத்னம் சிவராஜ் ஆகியோரை கடந்த முதலாம் திகதி பொலிஸார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து கொலை முயற்சிக்கு பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர். இதனையடுத்தே நேற்று 18 வயதுடைய நல்லூர் வீதி, அரசடியைச் சேர்ந்த நல்லூர் முத்து என அறியப்படும் யோகராசா சதீசையும் கோப்பாய் மத்தியைச் சேர்ந்த 18 வயதுடைய அருள் சீலன் பெட்ரிக் தினேசையும் பொலிஸார் கைது செய்தனர்.
கைதானவர்களிடம் தொடர் விசாரணை இடம்பெறும் நிலையில் இன்று அவர்களை நீதிமன்றில் ஆஜர் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் 7 மோட்டார் சைக்கிளில் வந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகள் ஊடாக கண்டறிந்துள்ள பொலிஸார் ஒவ்வொரு மோட்டார் சைக்கிள்களிலும் 2 அல்லது மூன்று பேர் இருந்துள்ளதை சாட்சிகள் ஊடாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர்.
அதன்படி குறைந்த பட்சம் 15 பேர் கொண்ட குழு இந்த தாக்குதல்களுடன் தொடர்பு பட்டுள்ளதாக சந்தேகிக்கும் பொலிஸார் அனைவரையும் சட்டத்தின் பிடிக்குள் கொண்டுவர விஷேட திட்டம் ஒன்றினை வகுத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஏனைய சந்தேக நபர்களை சட்டத்தின் பிடியில் கொண்டுவர பொலிஸார் தொடர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். இதற்காக விஷேட அதிரடிப்படையின் கட்டளைத் தளபதி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லதீபின் ஆலோசனைக்கு அமைய சிறப்பு படைப் பிரிவொன்றும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM