சிலம்பரசன் டி ஆர் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணுவின் தயாரிப்பில் உருவாகி வரும் புதிய திரைப்படத்திற்கு, 'அரசன்' என பெயரிடப்பட்டு, அதற்கான அறிவிப்பினை பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு படக் குழுவினர் உற்சாகத்துடன் அறிவித்துள்ளனர்.
இந்திய திரையுலகில் சாதனையாளர்களாக வலம் வரும் இயக்குநர் வெற்றிமாறன் - தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு- சிலம்பரசன் டி ஆர் ஆகியோர் இணைந்து '#STR 49 'எனும் பெயரில் தொடங்கிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும்? என்ற ஆவல் ரசிகர்களிடம் இருந்தது.
இந்நிலையில் இந்த சாதனை கூட்டணியில் உருவாகும் படத்திற்கு 'அரசன்' என பெயரிடப்பட்டிருப்பதாக மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டதுடன்.. படத்தை பற்றிய அதிலும் குறிப்பாக சிலம்பரசனின் கதாபாத்திரம் குறித்த தோற்றத்தை குறியீடாக வெளியிட்டு, ரசிகர்களை படக்குழுவினர் உற்சாகப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படத்தில் நடிக்கும் ஏனைய நடிகர்கள், நடிகைகள் மற்றும் பணியாற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM