நட்சத்திர நடிகராக வலம் வருவதற்கு கடுமையான சவால்களை சந்தித்து கொண்டிருக்கும் நடிகர் கவின் கதையின் நாயகனாக அழுத்தமான வேடத்தில் நடித்திருக்கும் 'மாஸ்க்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'கண்ணுமுழி..' எனும் முதல் பாடலையும் , பாடலுக்கான லிரிக்கல் விடியோவையும் படக் குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மாஸ்க்' எனும் திரைப்படத்தில் கவின், ஆண்ட்ரியா ஜெர்மியா, ருஹானி சர்மா, அர்ச்சனா சந்தோக், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
வட இந்திய இளம் பெண்ணுக்கும், தமிழ் பையனுக்கும் இடையேயான காதலை உணர்வுபூர்வமாக பேசும் இந்தத் திரைப்படத்தை தி ஷோ மஸ்ட் கோ ஆன் - பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆண்ட்ரியா ஜெர்மயா மற்றும் எஸ். பி. சொக்கலிங்கம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'கண்ணு முழி காக்கா முள்ளா.. புருவம் ரெண்டும் குறுவ நெல்லா..' எனத் தொடங்கும் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் விடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் கருமாத்தூர் மணிமாறன் எழுத, பின்னணி பாடகர் அந்தோணி தாசன் மற்றும் பின்னணி பாடகி சுபலாக்ஷிணி ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள். மண் மணக்கும் கிராமிய இசையில் உருவாகி இருக்கும் இந்த பாடல் வெகுஜன இசை ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM