கிழக்கு ஆளுநர் அலுவலகத்துக்கு முன் ஒன்றுதிரண்ட தனியார் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துநர்கள்!  

07 Oct, 2025 | 04:56 PM
image

திருகோணமலை முதல் அக்கரைப்பற்று வரை சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகளின் உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் இணைந்து இன்று (7) கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்னால் பேருந்துகளை நிறுத்திவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தை கைவிடுவதாகவும் அறிவித்துள்ளனர். 

கிழக்கு மாகாண தனியார் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் முன்வைக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்படவிருந்த நேர அட்டவணைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

இன்று முதல் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  நடைமுறைப்படுத்தவிருந்த நேர அட்டவணை தற்காலிகமாக கைவிடப்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநர் அளித்த உறுதிமொழியை சுட்டிக்காட்டி, போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக, போராட்டத்தை ஒழுங்கமைத்த தென்கிழக்கு கரையோர பிரதேச தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ்.பைரூஸ் தெரிவித்துள்ளார்.

நேற்று காலை திருகோணமலை - அக்கரைபற்று, திருகோணமலை - கல்முனை, திருகோணமலை -அம்பாறை மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் 11 தனியார் பேருந்துகள் சகிதம் பேருந்து உரிமையாளர்கள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மாகாண ஆளுநர் அலுவலகத்தின் முன்பாக போராட்டத்தை ஆரம்பித்தனர்.

“நாம் எமது பிரச்சினைகள் குறித்து ஆளுநருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். சாதகமான முறையில் முடிவு கிடைக்காவிட்டால், இங்கு தரித்து வைத்துள்ள 11 பேருந்துகளையும் எடுத்துச் செல்லமாட்டோம். நாங்களும் இந்த இடத்தை விட்டு வெளியேற மாட்டோம்” என்று கூறி இப்போராட்டத்தை தனியார் பேருந்து சங்கத்தினர் ஆரம்பித்தனர்.

அதனைத் தொடர்ந்து, ஆளுநருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் சங்கத்தின் செயலாளர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

"எமது கோரிக்கைகளை கேட்டறிந்த ஆளுநர் சர்ச்சைக்குரிய புதிய தனியார் பேருந்து நேர அட்டவணையை தற்காலிகமாக இடைநிறுத்தவும், இதுவரை பயன்படுத்தி வந்த பழைய அட்டவணையை இறுதி முடிவொன்று எட்டப்படும் வரை பயன்படுத்தவும் உடன்பட்டுள்ளார்.

மேலும், 150 கிலோ மீற்றருக்கு அதிக தூரம் பயணம் செய்யும், ஏனைய மாகாணங்களில் உள்ள தனியார் பேருந்துகளுக்கான நேர அட்டவணைகள் சுழற்சி முறையில் உள்ளதா என்பது பற்றி ஆராய்ந்து பார்ப்பதாகவும், அதன் பின்னர் ஒரு வார இடைவெளிக்குள் மீளவும் எமது சங்கத்துடன் கலந்துரையாடி, இறுதித் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள முடியும் என்றும் எமக்குக் கூறினார் எனத் தெரிவித்தார். 

இந்த திடீர் போராட்டம் காரணமாக திருகோணமலை முதல் கல்முனை, அக்கறைப்பற்று, அம்பாறை வரையிலான வழித்தடங்களில் நேற்று காலை முதல் மாலை வரை வழமையாக சேவையில் ஈடுபட்டிருந்த 15 தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை. இதனால் இவ்வழித்தடங்களில் பயணித்தவர்கள் கடும் நெருக்கடிகளை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தெங்கு பயிர்ச்செய்கையை மேம்படுத்த வடக்கு தென்னை...

2025-11-07 17:13:16
news-image

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வீட்டுக்...

2025-11-07 17:08:18
news-image

கிரான், பென்டுகால் பாலங்கள் அபிவிருத்திக்கு நிதி...

2025-11-07 17:09:47
news-image

இலங்கை மின்சார சபை மறுசீரமைக்கப்படும் -...

2025-11-07 17:02:58
news-image

கொழும்பில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான...

2025-11-07 16:56:46
news-image

மலையக மக்களுக்கு இந்திய அரசின்  குடியிருப்பு...

2025-11-07 17:00:15
news-image

செல்லப்பிராணிகள் இறந்த பின்னர் அதனை அடக்கம்...

2025-11-07 16:50:30
news-image

நவீன புகையிரதங்களை கொள்வனவு செய்ய நிதி...

2025-11-07 17:00:26
news-image

திண்ம கழிவகற்றலுக்கு நிதி ஒதுக்கீடு!

2025-11-07 16:38:58
news-image

முச்சக்கர வண்டி விபத்து ; இளைஞன்...

2025-11-07 16:40:59
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தை அபிவிருத்தி செய்யும்...

2025-11-07 16:33:33
news-image

நானுஓயாவில் லொறி - வேன் விபத்து...

2025-11-07 16:35:29