மட்டக்களப்பில் காசா யுத்தத்தின் மூன்று வருட நினைவு நாளை முன்னிட்டு இன அழிப்புக்கு நியாயம் கோரியும் தனி நாடாக பிரகடனப்படுத்தி கோரி 1245 வது நாள் நியாய பயணத்தின் ஊடாக பலஸ்தீன கொடிகளை ஏந்தியவாறு பெண்கள் இன்று செவ்வாய்க்கிழமை (07) கல்லடி பாலத்துக்கு அருகில் உள்ள செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் கவனயீர்ப்பு நடைபயணம் இடம்பெற்றது.
மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகில் உள்ள செபஸ்தியார் ஆலயத்தில் இருந்து காந்தி பூங்கா வரையும் நீதி நியாயம் கோரி தொடர்ந்து 1245 வது நாள் நியாய பயணம் என்ற தொனிப்பொருளில் அநீதிகள் படுகொலைகளுக்கு எதிரான சுலோகங்கள் ஏந்தியவாறு பெண்கள் அமைப்பு நடைபயணம் மேற்கொண்டு வருகின்றது
இந்நிலையில் இன்று காசா யுத்தம் தொடங்கி மூன்று வருட நினைவை முன்னிட்டு பெண்கள் நியாய பயணம் அமைப்புடன் கல்லடி பாலத்துக்கு அருகே உள்ள செபஸ்தியார் ஆலயத்தில் முன்னாள் பெண்கள் ஒன்று சேர்ந்தனர்.
இதனையடுத்து 77 வருடங்களாக பலஸ்தீனம் உன்னை புதைக்க முயற்சித்துள்ளனர் மீண்டும் மீண்டும் நீ சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவையாய் எழுவாயாக, உப்பில்லா உணவு போல பலஸ்தீனம் இல்லாத நாடு முழுமை அற்றதாகவும் சுவையற்றதாகும் இருக்கும், ஆற்றில் இருந்து கடல் வரை பலஸ்தீனம் விடுதலையாகும் என சுலோகங்களை கழுத்தில் தொங்க விட்டவாறு அங்கிருந்து காந்தி பூங்கா வரையும் நடைபயணமாக சென்றடைந்தனர்
அதனை தொடர்ந்து அங்குள்ள காந்தி சிலையில் காந்தியின் மேல் பலஸ்தீன அடையாளம் கொண்ட துணியால் அவரது உடலை போர்த்து கொண்டதுடன் தலைக்கு மேல் குடை ஒன்றை பொருத்திய பின்னர் யுத்தத்தின் வேதனை அறிந்தவர்கள் நாம். இந்த வேதனை எங்கும் தொடரக்கூடாது, நாளைய மழலைகள் பலி ஆகக் கூடாது என்பதே எமது வேண்டுதல். எங்கேயோ கேட்ட வை என குரல் எழுப்பிக் கொண்ட பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM