'அங்காடித்தெரு' மகேஷ் - அறிமுக நடிகர் குணா பாபு ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும்' தடை அதை உடை' எனும் திரைப்படத்தின் பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டுள்ளது. இதனை சர்வதேச விருதுகளை வென்ற படத்தொகுப்பாளரும், இயக்குநருமான அண்டனி- அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் அறிவழகன் முருகேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தடை அதை உடை' எனும் திரைப்படத்தில் மகேஷ், குணா பாபு ,திருவாரூர் கணேஷ், மகாதீர் முஹம்மத் , கே. எம். பாரிவள்ளல், கௌதமி வேம்பு நாதன், நாகராஜ், அம்பாள் சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். தங்கபாண்டியன் மற்றும் சோட்டா மணிகண்டன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பி சாய் சுந்தர் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை காந்திமதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
இதில் வரும் 31 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்திலிருந்து பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் 1995 ஆம் ஆண்டில் தமிழகத்தின் டெல்டா பகுதியில் நடைபெற்ற உண்மை சம்பவத்தை தழுவி எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருப்பதால் ரசிகர்களிடம் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM