கடன் சுமையை உண்டாக்கும் இணைய செயலிகளின் பின்னணியை விவரிக்கும் ' கேம் ஆஃப் லோன்ஸ் '

07 Oct, 2025 | 04:14 PM
image

நடிகர்கள் நிவாஸ் ஆதித்தன் - அபிநய் ஆகிய இருவரும் எதிரும் புதிருமாக நடித்திருக்கும் 'கேம் ஆஃப் லோன்ஸ்' எனும் திரைப்படம் இணையம் வழியாக கடனை வாங்கும் நபர்களைப் பற்றியும், கடன் வழங்கும் செயலிகளின் பின்னணியை பற்றியும் வணிக ரீதியாக விவரிக்கும் படைப்பு என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் உருவாகியுள்ள' கேம் ஆஃப் லோன்ஸ்' எனும் திரைப்படத்தில் நிவாஸ் ஆதித்தன், அபிநய், எஸ்தர், ஆத்விக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

சபரி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜோ கோஸ்டா இசையமைத்திருக்கிறார். சைக்கலாஜிக்கல் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜே ஆர் ஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஜீவானந்தம் தயாரித்திருக்கிறார்.

எதிர்வரும் 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை பற்றி இயக்குநர் பேசுகையில், '' தற்போதைய டிஜிட்டல் உலகில் எம்மவர்கள் எது வேண்டும் என்றாலும் ஓன்லைனில் ஓர்டர் செய்து, அதனை பெற்றுக் கொள்கிறார்கள். இது எந்த அளவிற்கு சாதகமாக உள்ளதோ... அதே அளவிற்கு பாதகத்தையும் ஏற்ப்படுத்தி வருகிறது.

நாளாந்தம் அதிகரித்து வரும் பண தேவைகளுக்காக இணையத்தில் கடன் வழங்கும் செயலியை பதிவிறக்கம் செய்து கடன் வாங்குகிறார்கள். ஆனால் அதனை திருப்பி செலுத்துவது என்பது எளிதான காரியமாக இருப்பதில்லை.

இப்படி சிக்கலில் சிக்கிக் கொள்ளும் ஒரு இளைஞன் காலையில் தொடங்கி மாலை வரை எதிர்கொள்ளும் உளவியல் நெருக்கடிகளை விவரிப்பது தான் இந்தத் திரைப்படம். இது அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.‌

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்