ஐஸ் போதைப்பொருளுடன் இளம் தம்பதிகள் கைது

07 Oct, 2025 | 04:11 PM
image

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் 2030 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன்  இளம் தம்பதிகள் கைது திங்கட்கிழமை (06) செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் பொலிஸார் மேற்கொண்ட கண்காணிப்பு நடவடிக்கையின் போது கல்குடாவில் இருந்து ஐஸ் போதைப்பொருளை முச்சக்கரவண்டியில் எடுத்து சென்ற போதே  இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனையடுத்த அவர்களிடம் இருந்து 2030 கிராம் ஐஸ் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட  முச்சக்கரவண்டியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

மேலும் இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது மொறக்கொட்டான்சேனையில் இருக்கு ஒரு பிரதான போதைப்பொருள் வியாபாரி குறித்த தம்பதிகளிடம் கொழும்பில் நாய்குட்டி ஒன்று  இருப்பதாகவும் அதனை எடுத்துவருமாறு கூறி 30 ஆயிரம் ரூபா பணம் தருவதாக தெரிவித்து முற்பணமாக 15 ஆயிரம் ரூபாவை வழங்கியியுள்ளார்.

இதனையடுத்து குறித்த தம்பதிகள் கொழும்புக்கு புகையிரதத்தில் சென்று அங்கு  புறக்கோட்டை பகுதியில் வைத்து குறித்த தம்பதிகளிடம் பெண் ஒருவர் நாய்குட்டி ஒன்றையும் ஒரு பையையும் வழங்கியதையடுத்து அவர்கள் பஸ் வண்டி ஒன்றில் கல்குடாவில் உள்ள அவர்களது வீட்டுக்கு திரும்பியுள்ளனர். 

சம்பவதினமான நேற்று மாலை மொறக்கொட்டாஞ்சேனையில் உள்ள போதை வியாபரியிடம் தாங்கள் கொழும்பில் இருந்து வாங்கி வந்த நாய்க்குட்டி மற்றும் பையை  கொண்டு சென்று கொடுப்பதற்காக முச்சக்கரவண்டியில் தம்பதியர்கள் இருவரும் கொண்டு சென்ற போதே  பொலிஸார் கைது செய்துள்ளனர். 

மேலும் , தாங்கள் குறித்த பையை திறந்து பார்க்வவில்லை எனவும் இதில் போதைப்பொருள் இருப்பது தங்களுக்கு தெரியாது எனவும்  தம்பதியர்கள் தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதில் கைது செய்யப்பட்ட இளம் தம்பதிகளை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்வதற்காக நீதிமன்ற உத்தரவை பெறும் மேலதிக சட்ட நடவடிக்கையில் ஈடுபட்டுவருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தபால் சேவைக்கு 2,800 புதிய நியமனங்கள்...

2026-02-13 16:41:11
news-image

பீடி இலைகளுடன் ஒருவர் கடற்படையினரால் கைது!

2026-02-13 17:48:57
news-image

9 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க...

2026-02-13 16:50:44
news-image

‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு தெற்கு...

2026-02-13 17:19:56
news-image

டித்வா சூறாவளியினால் வீடுகளை இழந்தோரை மீளக்...

2026-02-13 17:17:15
news-image

பல கோடி ரூபா பெறுமதியான திமிங்கில...

2026-02-13 17:21:20
news-image

ஊழலை நிறுவனமயப்படுத்துகிறது தற்போதைய அரசாங்கம் -...

2026-02-13 17:23:55
news-image

அரசாங்கத்தின் அடக்குமுறைகளுக்கு அஞ்சப்போவதில்லை: நாமல் ராஜபக்ஷ...

2026-02-13 17:06:13
news-image

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000...

2026-02-13 17:05:35
news-image

கல்வி அமைச்சு முதல் பாடசாலைகள் வரை...

2026-02-13 16:56:36
news-image

தேசிய போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்துக்கமைய கைதானவர்களின்...

2026-02-13 16:53:29
news-image

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்திற்கு எதிராக கொழும்பில்...

2026-02-13 16:47:13