இன்றைய சூழலில் எம்முடைய இளைய தலைமுறையினர் தங்களுடைய வாழ்க்கை நடைமுறைகளையும், உணவு முறைகளையும் முற்றாக மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால் இளம் வயதிலேயே இதய பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள்.
இத்தகைய பாதிப்புகளை தொடக்க நிலையில் அறிந்து கொள்வதற்கும், துல்லியமாக அவதானிப்பதற்கும் தற்போது நவீன பரிசோதனை முறை அறிமுகப்படுத்தப்பட்டு, பலன் அளித்து வருவதாக இதய சத்திர சிகிச்சை நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
இது தொடர்பாக அவர்கள் கூடுதல் விளக்கத்தை வழங்குகையில், '' இதயத்தில் ஏதேனும் அசௌகரியங்களோ... பாதிப்புகளோ... ஏற்பட்டால், அதனை அவதானிக்க எக்கோ கார்டியோகிராம் எனும் பரிசோதனையை மேற்கொள்கிறோம்.
இதனைத் தொடர்ந்து ஓஞ்சியோகிராம் எனும் பரிசோதனையும் மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானிக்கிறார்கள். மேலும் வேறு சிலருக்கு உணவு குழாய் வழியாக பிரத்யேக குழாயை செலுத்தி அதனூடாக இதய பாதிப்பை அவதானிக்கிறார்கள்.
இந்நிலையில் தற்போது இன்ட்ரா கார்டியாக் எக்கோ எனும் நவீன முறையில் இதயத்தில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பை துல்லியமாக அவதானிக்கிறார்கள்.
இத்தகைய பரிசோதனையின் போது உங்கள் காலின் தொடை பகுதியிலிருந்து மிக நுண்ணிய குழாய் ஒன்றினை உள்ளே செலுத்தி, நேரடியாக இதயப் பகுதியில் உள்ள பாதிப்புகளை கண்டறிகிறார்கள்.
இந்த பரிசோதனையில் இதய பாதிப்பு- இதய தசைகளில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு - இதய ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பு பாதிப்பு - சீரற்ற இதயத்துடிப்பு- என இதயம் சார்ந்த அனைத்து பாதிப்புகளையும் துல்லியமாக அவதானிக்க இயலும். இது சிகிச்சையை தீர்மானித்து, முழுமையான நிவாரணத்தை வழங்க உதவுகிறது'' என்றனர்.
வைத்தியர் முரளிதரன் தொகுப்பு அனுஷா.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM