( இணையத்தள செய்திப் பிரிவு )
ரூபவாஹினியின் அனுசரனையில் இலங்கையில் ஆசிய பசுபிக் பிராந்திய ஒலிபரப்புச் சங்க மாநாடு ஒன்று இடம்பெறவுள்ளது.
அதனடிப்படையில், ஆசிய, பசிபிக் (ABU) ஊடகங்கள் எதிர்வரும் நவம்பர் மாதம் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் கொழும்பில் ஓன்று கூடவுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள் 200 பேரை உள்ளடக்கி, 35 நாடுகள் இதில் பங்கு கொள்கின்றதாக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் கிளீன் ஸ்ரீலங்கா மேலதிகச் செயலாளர் தெரிவித்தார்.
இது தொடர்பான ஊடகவியலாளர் மாநாடு கடந்த செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதி மவுட்லவேனியா ஹோட்டலில் இடம்பெற்றது.
ஆசிய பசிபிக் ஒலிபரப்பாளர்கள் சங்கத்தின் 9 ஆவது மாநாட்டினை இம்முறை இலங்கையில் நடத்த தீர்மானித்துள்ளது.
இதன் பிரதான அனுசரணையாளராக இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் முன்னின்று இம் மாநாட்டினை நடத்துகின்றது. இம் மாநாடு எதிர்வரும் நவம்பர் 25 - 27 ஆம் திகதிகளில் மவுட்லவேனியா ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இம் மாநாட்டில் ஜனாதிபதி செயலகத்தின் கிளீன் சிறிலங்கா, மற்றும் ஊடக அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகள் இணைந்த நிறுவனங்கள், சர்வதேச அமைப்புக்கள் பிராந்தியத்தில் உள்ள ஊடக நிறுவனங்கள், சிவில் மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 75 பேர் இதில் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
மேற்படி மாநாடு சம்பந்தமான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஜிஹான் டி சில்வா மற்றும் ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளர் கிளீன் ஸ்ரீலங்கா , இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், செய்திப் பணிப்பாளர் , மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
இம் மாநாடு இந்தோனேசியா, நேபாளம், பங்களாதேஷ், தாய்லாந்து. பிஜி, மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளில் நடைபெற்று இம்முறை இலங்கையில் நடைபெறுகின்றது. காலநிலை மாற்றம் , இலங்கையில் கடந்த காலங்களில் சுனாமியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டது.
அந்த வகையில் இலங்கையில் வெள்ளப்பெருக்கு, வறட்சி, மண்சரிவு, நில அதிர்வுகள் மற்றும் சுனாமி போன்ற இயற்கை மற்றும் மனிதர்களால் உருவாக்கப்படும் அனர்த்தங்கள் உள்ளிட்ட விஷயங்களை ஊடகவியலாளர் எவ்வாறு பொதுமக்களுக்கு செய்திகளாக கொண்டு செல்ல முடியும் என்பது தொடர்பில் விரிவாக ஆரயப்படவுள்ளதாக ஆசிய பசுபிக் பிராந்திய ஒலிபரப்புச் சங்கமான ABU அறிவித்துள்ளது.
ஜப்பான்(NHK) , சீனா(CMG), இந்தியா தூர்தர்ஷன், அவுஸ்திரேலியாவின் (ABC), துருக்கியின்(TRT), மலேசியா(RTM) ஆகிய ஊடக நிறுவனங்கள் உட்பட 35 நாடுகளைச் சேர்ந்த தேசிய ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொள்வார்கள். அதனுடன் கிளீன் ஸ்ரீலங்கா செயற்திட்ட பிரதிநிதிகள், இதில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
அனர்த்தங்கள், காலநிலை மாற்றங்கள் போன்றவற்றிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்வதன் தூய்மையான மற்றும் பசுமையான எதிர்காலமொன்றை உருவாக்குதல் இந்த மாநாட்டில் பிரதான நோக்கமாகும்.
2004 ஆம் ஆண்டு ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் (ABU) உள்ள நாடுகளைச் சேர்ந்த சுமார் 227,000 பேரின் உயிர்களை காவுகொண்ட இந்து சமுத்திர பிராந்தியத்தில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இவ்வாறு ஊடக நிறுவன சந்திப்பொன்று இடம்பெற வேண்டிய முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
இம்மாநாட்டை முன்னிட்டு புதிய இலச்சினை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் பாடசாலை மாணவர்களிடையே சித்திரம் வரைதல் போட்டி நிகழ்ச்சி மற்றும் குறுந் திரைப்படம் போன்ற ஆக்கங்களை இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் கோரியுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM