மூன்றாம் ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது இலங்கையின் முதல் தனியார் சர்வதேச விமான நிறுவனமான FitsAir

07 Oct, 2025 | 01:57 PM
image

இலங்கையில் தனியாருக்குச் சொந்தமான முதலாவது சர்வதேச விமான நிறுவனமான FitsAir, திட்டமிடப்பட்ட அட்டவணையின் பிரகாரம் இடம்பெறும் சர்வதேச பயணிகள் செயல்பாடுகளில் மூன்று ஆண்டுகள் நிறைவைப் பெருமையுடன் கொண்டாடுவதுடன்,  இலங்கை மக்கள் மத்தியில் விமானப் பயணத்தில் மற்றுமொரு தீர்க்கமான தருணமாக இது மாறியுள்ளது.

இவ்விமானசேவை நிறுவனத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டு மிகச் சிறப்பான வளர்ச்சியையும், சாதனைகளையும் காணப்பெற்ற ஒரு ஆண்டாக அமையப்பெற்றது. 

FitsAir விமான சேவை இடம்பெறும் நகரங்களின் வலையமைப்பில் புதிய வரவாக, கோலாலம்பூருக்கான விமான சேவை இவ்வாண்டில் வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அதிகரித்த கேள்வி காரணமாக மாலைதீவு மற்றும் டக்கா ஆகிய நகரங்களுக்கான விமான சேவைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது. 

சுயாதீனம், வினைதிறன், மற்றும் சேவை மகத்தும் ஆகியவற்றில் இவ்விமான சேவை நிறுவனம் காண்பிக்கும் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துவதில் பாரியதொரு படியாக, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விமான நிலைய செயல்பாடுகளைச் சொந்தமாகக் கையாள்வதற்கான அங்கீகாரத்தையும் மிக அண்மையில் பெற்றுள்ளது.     

இந்த ஆண்டு நிறைவு குறித்து FitsAir பணிப்பாளர் அமார் காசிம்  கருத்து தெரிவிக்கையில், 

FitsAir ன் வளர்ச்சி வரலாறு நெகிழ்திறன் சார்ந்தது என்பதுடன், தைரியமான குறிக்கோளையும் அடிப்படையாகக் கொண்டது. 

பயணிகள் சேவையில் மூன்று ஆண்டுகள் நிறைவை நாம் கொண்டாடுகின்ற இத்தருணத்தில், எமது வலையமைப்பை விரிவுபடுத்தி, எமது செயல்பாடுகளை வலுப்படுத்தி, மற்றும் எமது பணியாளர்கள் மற்றும் கட்டமைப்புக்கள் மீது முதலீடுகளை மேற்கொண்டு, வளர்ச்சியின் புதிய கட்டத்தினுள் நாம் காலடியெடுத்து வைக்கின்றோம். 

எமது இலக்கு தொடர்ந்தும் அதனையே பின்பற்றுகின்றது. பிராந்திய மட்டத்தில் எளிதாகவும், மிகவும் சிக்கனமான கட்டணங்களுடனும் பிரயாணங்களை மேற்கொள்ளும் வகையில், நவீன, செயல்திறன் மிக்க, மற்றும் பெருமைமிக்க இலங்கை விமான சேவையைக் கட்டியெழுப்பும் பயணம் தொடரும். 

மூன்று ஆண்டுகள் நிறைவை முன்னிட்டு FitsAir கொழும்பிலிருந்து துபாய், கோலாலம்பூர், மாலைதீவு, மற்றும் டக்கா ஆகிய நகரங்களுக்கு, 20 கிலோ பயணப் பொதி, மற்றும் 7 கிலோ கையிருப்பு பொதிகளை உட்படுத்தி, தாராள சலுகையுடன், கவர்ச்சியான கட்டணங்களை மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வழங்குகின்றது. 

இவ்விசேட கட்டணங்கள் மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் கிடைப்பதுடன், www.fitsair.com நிறுவன இணையத்தளத்தின் மூலமாக பிரத்தியேகமான முற்பதிவுகளை மேற்கொள்ள முடியும்.  

தற்போது பயணிகள் சேவையில் இவ்விமான சேவை நான்காவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கின்ற தருணத்தில், தனது வலையமைப்பை விரிவுபடுத்தி, வாடிக்கையாளர்களின் அனுபவங்களை மேம்படுத்தி, மற்றும் தனது செயல்பாடுகள் மத்தியில் புத்தாக்கங்களை அறிமுகப்படுத்துவதில் FitsAir தொடர்ந்தும் கவனம் செலுத்தியுள்ளது என்றார். 

நம்பிக்கை என்ற வலுவான அத்திவாரத்துடனும், சிக்கனம் என்ற ஆழமான அர்ப்பணிப்புடனும் கட்டியெழுப்பப்பட்டுள்ள FitsAir, தேசத்தின் பெருமைமிக்க “வான்வெளியில் நண்பன்” (Friend in the Skies) என்ற சிறப்புடன், பிராந்திய வான்பரப்பின் மத்தியில் இலங்கையின் உற்சாக உணர்வுகளை தொடர்ந்தும் கொண்டு சென்ற வண்ணம் FitsAir பயணித்து வருகிறது.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right