12 ஆண்டுக்கு பின்னர் பூத்து குலுங்கும் குறிஞ்சி மலர்கள் ; குவியும் சுற்றுலா பயணிகள்

Published By: Digital Desk 3

07 Oct, 2025 | 01:01 PM
image

12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் பூவான நீலக்குறிஞ்சி மலர்கள் தற்போது இலங்கையின் மத்திய மலைநாட்டின் நுவரெலியா மாவட்டத்தில் 2,100 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் ஒளிந்திருக்கும் தேசிய பூங்காவின் ஹோட்டன் சமவெளியில் அதிகமான இடங்களில் பூக்கத் துவங்கியுள்ளன.

இந்தப் பூக்களைக் காண வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள்  ஆர்வத்துடன் படையெடுத்து வருகின்றனர்.

ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கும் ஒரு முறை இதில் பூக்கும் மலர்களே, இதன் தனித்துவமாகக் கருதப்படுகிறது.

ஹோட்டன் சமவெளியில் இந்த மலர்களிடம் வசீகரிக்கும் வாசம் இல்லாவிடினும் ஒரு மென்மையான வாசம் இருப்பதாகவும் , பூக்கும் காலங்களில் இவற்றை 10-க்கும் மேற்பட்ட தேனீ இனங்கள் தேடி வருவதாகவும்  புல்வெளிகள் நிறைந்த ஹோட்டன் சமவெளி மலைப்பகுதியில் வளரும் இந்த செடிகளில் வெள்ளை ,நீலம் , ஊதா மற்றும் இளஞ்சிவப்பு உள்ளிட்ட பல வண்ணங்களில் பூத்து உள்ளதாகவும் அவைகள் குறைந்தபட்சம் அரை மீட்டரிலிருந்து ஒரு மீட்டர் வரை உயரம் கொண்டவை என ஆராய்ச்சியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டன் சமவெளி உலகத்தில் மிக அரிய உயிரியல் சூழல்களுக்குள் ஒன்றாக கருதப்படுகிறது. இதில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு பூத்ததாகவும் அதன் பின்னர் இவ்வருடம் (2025) பூத்து உள்ளது எனவும் மீண்டும் 2037 ஆண்டு பூக்கும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் மற்றும்  சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கும் மேலும் தெரிவிக்கின்றனர்.

நுவரெலியா ஹோட்டன் சமவெளியில் 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலர்களை காண மக்கள் ஆர்வத்துடன் படையெடுத்து வருவதால் நுவரெலியா , பட்டிபோல, அம்பேவளை போன்ற பிரதான வீதியில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் காணப்படுவதாக இதனை சீர் செய்வதற்கு அதிகமான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்த நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக பட்டிபோல பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி தலைமை பரிசோதகர் அனில் ஜெயசிங்க தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆண் துணைகளை வாடகைக்கு அமர்த்தும் வசதி...

2025-10-20 12:31:38
news-image

பிரித்தானிய மன்னர் சார்ல்ஸின் இயற்கை ஆவணப்படம்...

2025-10-10 11:03:47
news-image

12 ஆண்டுக்கு பின்னர் பூத்து குலுங்கும்...

2025-10-07 13:01:28
news-image

அரிய வகை செம்மஞ்சள் நிற சுறா...

2025-08-27 11:54:32
news-image

அம்மான்னா சும்மா இல்லடா: நெகிழ வைக்கும்...

2025-08-21 21:53:30
news-image

திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா கலாலயாவில் பரதம்...

2025-08-10 21:09:40
news-image

காதுகளால் பிக்கப் ரக வாகனத்தை இழுத்த...

2025-07-14 16:41:35
news-image

விவாகரத்து பெற்றதை 40 லீற்றர் பாலில்...

2025-07-14 12:12:29
news-image

மெக்சிகோவில் மேயருக்கும் முதலைக்கும் திருமணம் 

2025-07-08 14:14:57
news-image

விலங்குகளைப் புதுமையுடன் புகைப்படம் பிடிக்கும் கலையின்...

2025-06-23 10:47:42
news-image

புத்திசாலி யானைகள் : வைரலாகும் வீடியோ

2025-06-12 19:09:30
news-image

மன்னாரில் சுமார் 800 ஆண்டுகள் பழமையான...

2025-06-09 14:07:39